சரும பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக…!

சரும பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக…!

மேனி எழிலை பாதுகாக்க இன்று பலவிதமான செல்கள், கிரீம்கள் என கிடைக்கிறது. இவை சரும பாதுகாப்பிற்கு உகந்ததாகவும், அதை மேம்படுத்தவும் துணை நிற்கின்றன. சரும பாதுகாப்பிற்கான பராமரிப்பு க்ரீம்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் முக்கியமாக சேர்க்கப் படுவது கோகோ பட்டர். கோகோ விதைகளிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு நிறைந்த மஞ்சள் நிறப் பொருளே கோகோ பட்டர் என அழைக்கப்படுகிறது.

இதில் நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. பொட்டாசியம், கால்சியம், பிங்க், மெக்னீசியம், இரும்பு, காப்பர் மற்றும் பல தாதுப் பொருட்கள் உள்ளன.

கோகோ பட்டரில்உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்து இருக்க உதவுகிறது. சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து சருமத்தை பொலிவாக்கும். புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

எக்ஸிமா மற்றும் தோல் நோயால்‌ பாதிக்கப்பட்டவர்கள் கோகோ பட்டரை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் கிரீம்களை உபயோகிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும். பட்டரை நேரடியாக பயன்படுத்த சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

இவை சேதமடைந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்கி வடுக்கள், தழும்புகள் போன்றவற்றை மென்மையாக்கி சரிசெய்கிறது. கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பின்பும் பெண்கள் கோகோ பட்டரை உபயோகிக்க வரிகள், தழும்புகள் வராமல் தடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com