கை, கால், முட்டி பகுதிகளில் இருக்கும் கருமை நீங்க…

கை,  கால்,  முட்டி பகுதிகளில் இருக்கும் கருமை நீங்க…

பொதுவாக நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கை, கால், தொடை பகுதிகளில் கொடுப்பதில்லை. அதனால் பெரும்பாலானவர்களுக்கு அந்த பகுதிகளில் கருமை தட்டி இருக்கும். இயல்பான நம் தோல் நிறத்திற்கு மாற்ற சில குறிப்புகளை பின்பற்றினால் சரியாகிவிடும்.

1)   நீர் சத்து குறைந்து தோல் வறண்டு போவதால் இப்பகுதிகள் கருத்து விடுகிறது. இதற்கு உருளைக் கிழங்கை நான்கு துண்டுகளாக நறுக்கி கருமை மற்றும் தழும்புகள் உள்ள இடத்தில்  நன்கு தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட நாளடைவில் கருமை மாறி நம் இயல்பான தோல் நிறத்துக்கு வந்து விடும்.

2)   ரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து கருமை படர்ந்த இடத்தில் தடவி மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

3)   முகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாம் கை கால் கழுத்து பகுதிகளில் கருமை படிந்திருப்பதை கவனிக்காமல் அலட்சியப்படுத்துகிறோம். அந்த இடங்களில் பாலுடன் சிறிது அரிசி மாவு கலந்து பரபரவென தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழிவி விட நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

4)   தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து தடவி மசாஜ் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

5)   ர்க்கரை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு ஒரு மூடி எலுமிச்சம் பழத்தில் முக்கி எடுத்து கருமை படர்ந்த இடங்களில் தேய்த்து விட்டு நன்கு மசாஜ் செய்யவும். 20 நிமிடங்களுக்கு இப்ப குளிர்ந்த நீரால் கைவிட நிறம் மாறிவரும்.

6)   ருளைக்கிழங்கை சிறிது பால் விட்டு மைய அரைத்து கருமை படர்ந்த கை வெட்டிகள் கால் முட்டிகள் கழுத்து பகுதிகள் தொடை பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு செய்ய செய்ய சில நாட்களிலேயே கருமை நீங்கி தோலின் இயல்பான நிறம் வந்துவிடும்.

7)   ரு சிறு கிண்ணத்தில் தயிர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து பஞ்சில் முக்கி கருமை படர்ந்த இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

8)   முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் 3 ஸ்பூன், மஞ்சள் தூள் அரை ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு சிறிது கலந்து கை, கால், கழுத்து ,தொடை பகுதிகளில் தடவி 30 நிமிடங்கள் கழித்து நான்கு குளிர்ந்த நீரால் தேய்த்து கழுவி விட கருமை நீங்கி பளிச்சென்று ஆகிவிடும்.

9)   தேன் ஒரு ஸ்பூன், சர்க்கரை ஒரு ஸ்பூன் ,எலுமிச்சம் பழச்சாறு இரண்டு ஸ்பூன், அரிசி மாவு ஒரு ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கழுத்து பகுதி, முழங்கால், கை பகுதிகளில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விட சில நாட்களிலேயே இயல்பான நிறம் வந்துவிடும்.

10) ந்தனப் பொடி ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் 4 ஸ்பூன், அரிசி மாவு ஒரு ஸ்பூன் கலந்து தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கைவிட நிறம் மாறும்.

பொதுவாகவே தோலின் கருமை, தழும்புகள் மறைய எலுமிச்சம் பழச்சாறு, தேன், தயிர், உருளைக்கிழங்கு ஆகியவை பெருமளவில் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com