பட்டு போன்ற அழகு முகம் வேண்டுமா?

பட்டு போன்ற அழகு முகம் வேண்டுமா?

அழகாக ஜொலிக்க யாருக்கு தான் ஆசையிருக்காது. உடனடியாக ஒருவருடைய முகம் பொலிவு மற்றும் ஜொலிப்பு தன்மை பெறுவதற்கு அதிக அளவு பணம் செலவுசெய்து பேசியல் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம் வீட்டில் கிடைக்க சின்ன சின்ன சாதாரண பொருட்களை வைத்தே எப்படி ஆச்சரியம் தரும் வகையில்நம்முடைய முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ள முடியும் என்பது தெரியுமா?

முதலில் கடலை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். கடலை மாவுக்கு ஈடு இணையான சரும பராமரிப்பு எதுவுமே இருக்க முடியாது. கடலை மாவு ஒரு ஸ்பூன்மட்டும் எடுத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள். அதுபோல எல்லோருடையவீட்டிலும் முல்தானி மெட்டி இருக்கும். இந்த முல்தானி மெட்டி முகப்பொலிவைஅதிகரித்து எண்ணெய் பசையை உடனடியாக நீக்கக்கூடிய ஆற்றல்கொண்டுள்ளது . எனவே முல்தானிமட்டி அரை ஸ்பூன் அளவிற்கு பவுலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பேஸ்பேக்
பேஸ்பேக்

கடலை மாவு மற்றும் முல்தானி மெட்டியுடன் இப்பொழுது நாம் சேர்க்க இருக்கும்பொருள் சுத்தமான தேன் ஆகும். தேன் இல்லை என்றால் கற்றாழை ஜெல்பயன்படுத்துங்கள். தேன் அல்லது கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு தேயிலை தூள் சேர்க்கவேண்டும். பச்சை தேயிலை தூள் அல்லது நீங்கள் சாதாரணமாக டீ போடபயன்படுத்தும் தேயிலை தூள் எது உங்களிடம் இருக்கிறதோ, அதை பயன்படுத்திக்கொள்ளலாம். பச்சை தேயிலை பயன்படுத்தினால் அதில் இருக்கும் ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் உடனடியாக நம்முடைய சருமத்திற்கு ஒரு க்லோ கொடுக்கும். இல்லாதவர்கள் டீத்தூளை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது இதை ஒருபேஸ்ட் போல நன்கு ஸ்பூன் வைத்து கலந்து அடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு ரெண்டு நிமிடம் அப்படியே ஊறவிட்டு விடுங்கள். அதன் பிறகு உங்களுடையமுகத்தை ஒருமுறை சாதாரண தண்ணீரால் கழுவி துடைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த பேஸ்ட்டை முகம் , கழுத்து போன்ற பகுதிகளில் நன்கு மசாஜ்செய்வது போல மசாஜ் செய்து பூசிக் கொள்ளுங்கள். இதனால் அந்த இடங்களில்இருக்கக்கூடிய அழுக்குகள் மற்றும் கருமை நீங்கும்.

பேஸ்பேக்
பேஸ்பேக்

மூக்கிற்கு மேலேயும் அது போல தேயுங்கள். இதனால் கரும்புள்ளி, சொரசொரப்புதன்மை, வெண்புள்ளி போன்றவை இருந்தாலும் அவை நீங்கும். கண்களுக்கு கீழேஇருக்கும் கருவளையம் போன்ற இடங்களில் லேசாக நன்கு மசாஜ் செய்யவேண்டும். இப்படி ஒரு ஐந்து நிமிடம் செய்த பிறகு சில நிமிடம் உலற விட்டுவிடுங்கள். நன்கு உலர்ந்ததும் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரால் மெல்லத்துடைத்து எடுத்து விடுங்கள். அவ்வளவுதான் ஃபேசியல் செய்தது போன்றஇன்ஸ்டன்ட் பொலிவு உடனே கிடைக்கும்.

பட்டு போன்ற உங்கள் முகத்தை பார்ப்பவர்கள் எந்த பார்லரில் பேஷியல்செய்தீர்கள்? இவ்வளவு பளபளப்பாக இருக்கிறதே என கேட்பார்கள்….!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com