ஊட்டச்சத்து மிகுந்த ஸ்கின் கேர் டிப்ஸ்!
பிஸ்தா, பருப்புகளின் அரசனான பிஸ்தா பருப்பு சுவையிலும், சத்துகளிலும் மேம்பட்டது. நார்ச்சத்து, நிறைவேறாத கொழுப்பு அமிலங்கள் (unsaturated fatty acids) மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேர்மங்களை (anti oxidant compounds) கொண்ட ஆரோக்யமாக ஊட்டச்சத்து அடர்த்தியை கொண்டவை.
பொதுவாகவே நட்ஸ் வகைகளில் புரதச்சத்து அதிகம் இருக்கும். அதிலும் பிஸ்தாவில் கூடுதல் நன்மைகள் உள்ளன. திசுக்களை சரிசெய்ய, உடலியல் எதிர்வினைகளை ஒழுங்குபடுத்துகிறது.
பிஸ்தாவை ரெகுலராக சாப்பிடுவதன் மூலம் கண்புரை பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். மலச்சிக்கலை தடுப்பதன் மூலம் ஆரோக்யமாக செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது. புரோபயாடிக் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சூரிய கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
பிஸ்தாவில் உள்ள எண்ணெய் பசை சருமத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தை போக்கி இளமையான தோற்றத்தை கொடுக்கிறது.
பிஸ்தா எண்ணெய் சிறந்த மாய்ஸ்சரைசர். சருமத்தை மிகவும் மென்மையாக ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. பிஸ்தாவில் இருக்கும் கொழுப்புதன்மை கூந்தலுக்கு ஊட்டத்தை அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. கூந்தலின் வேர்க்கால்கள் வலுவடைந்து கூந்தல் உதிர்தல் தடைபடுகிறது. பயோடின் குறைபாட்டை நிவர்த்தி செய்யும்.
பிஸ்தாவை ரெகுலராக அளவாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.