சரும பாதுகாப்பு டிப்ஸ்கள்!

சரும பாதுகாப்பு டிப்ஸ்கள்!

ருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள்தான் பொடுகு மற்றும் முகப்பருவுக்கு காரணம். பொடுகு ஒரு வகை பூஞ்சையால் ஏற்படுகிறது. சீபம் என்ற எண்ணெய் குறைந்த அளவில் சுரப்பது, ஊட்டச்சத்து குறைபாடு, மனஅழுத்தம் என பல காரணங்களால் பொடுகு வருவதாக கூறப்படுகிறது. பொடுகை கட்டுப்படுத்தலாம்.

இதற்கு தலையை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். பொடுகை கட்டுப்படுத்தும் ஷாம்பூக்களை உபயோகிக்கலாம். எண்ணெய் சுரப்பிகள்‌ அடைப்பில்லாமலும், இளம் வயதில் ஹார்மோன் மாற்றங்களால் பருக்கள் தோன்றுகின்றன. இதை போக்க அடிக்கடி முகம் கழுவுதல், எண்ணெய் பசை மிகுந்த க்ரீம்கள் ஐ தவிர்த்தல், ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ள பரு வருவதை தவிர்க்கலாம். தலைமுடி ஆரோக்யம் ஆக இல்லாமல் இருந்தாலும் பரு வரும். சமச்சீரான உணவு, நல்ல உறக்கம் போன்றவை உடல்நலம் மற்றும் முக அழகை பாதுகாக்கும்.

ண்களுக்கு கீழே சிலருக்கு வீக்கம் இருக்கும். இதனைப் போக்க எளிய வீட்டு வைத்தியம்.

டுகை பொடி செய்து சலித்து எடுத்து அதை தேவையான அளவு தேங்காய் எண்ணையில் குழைத்து கண்களுக்கு கீழே தடவி வர வீக்கம் படிப்படியாக குறையும்.கண்களும் பளிச்சிடும்.

ரண்டு டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயை சூடாக்கி இறக்கி ,அதில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணையை கலந்து வைக்கவும்.கர்ப்ப காலத்தில் தினமும் இந்த எண்ணையை வயிற்றில் பரவலாக தடவி அரை மணி நேரம் கழித்து ஊறியதும் கழுவி குளித்திட வரிவரியான கோடுகளோ கலர் வித்தியாசமோ  வராது.

ரும சொரசொரப்பு போக கடுகை விழுதாக்கி தடவி கழுவி வர கருமை நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com