தேன் கொண்டு சில அழகு குறிப்புகள்!

தேன் கொண்டு சில அழகு குறிப்புகள்!

எங்கள் வீட்டில் நாங்கள் நான்கு பெண்கள். யாரும் அழகு நிலையத்திற்குச் சென்றதில்லை. வீட்டிலேயே இது போன்ற அழகு குறிப்புகள் செய்து எங்களை பளிச்சென்று வைத்துக் கொள்வோம். இவை அனைத்தும் எங்கள் அனுபவத்தால் எழுதுபவை. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களேன்…

ருமத்தின் வறட்சியை போக்கி ஈரப் பதமாக வைக்க உதவும் தேன்.

தேன் நம் சருமத்திற்கும், கூந்தலுக்கும்,  உடல் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவும். கலப்படமில்லாத தேனாக வாங்கி ஒரு ஸ்பூன் எடுத்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு கொண்டு முகத்தை கழுவ முகப்பரு, பருக்களால் உருவாகும் வடுக்களை போக்கும்.

யிர் ஒரு ஸ்பூன், தேன் அரை ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ பளிச்சென்று முகம் மின்னும்.

தேன் நம் சருமத்துளைகள் வரை சென்று ஆழமாக சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. தேனில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் சருமத்தில் நோய்க்கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கும். முகம், கை, கால் போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் சிறிது தேனை தடவி வர காயம்  விரைவில் ஆறி அதன் தழும்பும் மறைந்துவிடும்.

ப்பாளி பழ துண்டுகள் நான்கை எடுத்து மசித்து அத்துடன் தேன் ஒரு ஸ்பூன் கலந்து முகம், கழுத்து பகுதிகளில்  தடவி மென்மையாக மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து கழுவி விட இளமையான தோற்றத்தை பெறலாம்.

ருமத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்கி இளமையான தோற்றத்தை கொடுக்கும். ஒரு ஸ்பூன் தேனுடன் சிறிது சந்தன பொடியையும் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட முதுமை தோற்றம் வருவதை தள்ளி போடுவதுடன் முகமும் பொலிவு பெறும்.

சிறிது தேனுடன் சில துளிகள் நீர் கலந்து கையால் நன்கு தேய்த்து முகத்தில் வட்ட வடிவில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவி டோனரை பயன்படுத்த மேக்கப்பை பளிச்சென்று எடுத்துக்காட்டும்.

ரவு தூங்கச் செல்லும் முன்பு சிறிது தேன் எடுத்து விரலால் தொட்டு உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய உதட்டில் ஏற்படும் வெடிப்பு, காய்ந்து வறண்டு காணப்படும் தன்மை நீங்கி விடும்.

ரு ஸ்பூன் ஓட்ஸுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து சருமத்தில் தடவி அதிக அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக மசாஜ் செய்து வர முகம் சிவப்பழகு பெறுவதுடன் முகத்தில் உள்ள கருந்திட்டுகளும் மறைந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com