தக்காளி ஃபேஸ் பேக்!


தக்காளி ஃபேஸ் பேக்!

1)  சிலருக்கு முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் கடலை மாவில் தயிர் இரண்டு ஸ்பூன், அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென்று ஆகிவிடும்.

2)  க்காளி முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்கும். இதற்கு தக்காளியை விதையுடன் சேர்த்தே நன்கு அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட நல்ல பலன் கிடைக்கும்.

3)  க்காளி சாறுடன் வெள்ளரிச்சாறையும் சம அளவு கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

4)   வாரம் இருமுறை தக்காளி சாறுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சமையல் சோடா ஒரு சிட்டிகை அளவு சேர்த்து கண்களுக்கு கீழுள்ள கருவளையத்தின் மீது பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவ கருவளையம் மறைந்துவிடும்.

5)  றண்ட சருமம் முகத்தை டல்லாகிவிடும் . இதற்கு சருமத்தை சுத்தப்படுத்திய பின் ஒரு நல்ல டோனரை பயன்படுத்த நம் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும்.

6)  க்காளி விட்டமின்களும் சத்துக்களும் நிறைந்தது. இது சருமத்திற்கு அதிக பளபளப்பை தருவதுடன் சுருக்கங்களை நீக்குவதிலும் , இறந்த செல்களை அகற்றி களையிழந்து இருக்கும் முகத்தை பொலிவடைய செய்வதிலும் கில்லாடி.

7)  க்காளி சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்து முகத்தில் ஸ்க்ரப் செய்ய இறந்த சரும செல்களை நீக்குவதுடன் முகத்தை பளபளப்பாக வைக்கவும் உதவும்.

8)  க்காளி, சக்கரை சிறந்த பேஷியல் ஸ்க்ரப். கண்கள், வாயை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள சுருக்கங் களையும், நெற்றி பகுதியில் உள்ள சுருக்கங்களையும் குறைக்க உதவும்.

9)  ருமம் மென்மையாக இருக்க கடலை மாவுடன் தக்காளிச்சாறு,  மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ சருமம் பட்டுப்போல் மென்மையாகும்.

10) க்காளியை அரைத்து அத்துடன் இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து பருக்களால் வடுக்கள் இருக்கும் இடங்களில் தடவி 20 நிமிடங்கள் நன்கு காயவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவி வர வடுக்கள் மெல்ல மறைய துவங்கும்.

11) க்காளி சாறுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல் போட்டு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர முகம் மாசு மருவின்றி பளிச்சென்று இருப்பதுடன் சுருக்கங்கள் வருவதையும் தடுத்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com