கருவளையம் நீங்க சின்ன சின்ன டிப்ஸ்... ட்ரை பண்ணி பார்க்கலாமே!

கருவளையம் நீங்க சின்ன சின்ன டிப்ஸ்... ட்ரை பண்ணி பார்க்கலாமே!

ண்களுக்கு கருவளையம் வருவது பெண்களுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல ஆண்களும் இதனை எதிர்கொள்கிறார்கள். மார்க்கெட்டில் இதற்கு நிறைய கிரீம்கள் கிடைக்கிறது. ஆனால் வீட்டிலேயே சில உபயோகமான குறிப்புகளை செய்து அவற்றை முழுமையாக எப்படி நீக்கலாம் என்று பார்க்கலாம்.

பொதுவாக இந்த கருவளையங்கள் தோன்ற காரணம் போதுமான அளவு ஓய்வு இல்லாமையும், சரியான உறக்கம் இல்லாமையும், வேலை சுமை அதிகமாவதும், இவற்றின் காரணமாக மனஅழுத்தம் அதிகமானாலும் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படும். நல்ல சத்தான உணவு, பழங்கள், தேவையான அளவுக்கு தண்ணீர் பருகுதல் ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் முகப்பருக்களும், கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படாது.

இதற்கான தீர்வு :

1) காப்பித்தூள் சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெய் விட்டு குழைத்து கண்களுக்கு கீழே தடவி பத்து நிமிடங்கள் மென்மையாக அதாவது மெதுவாக அழுத்தி மசாஜ் செய்து விடுங்கள். பிறகு நன்கு உலர விட்டு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ கருவளையம் போய்விடும்.

2) தேபோல் காப்பித்தூளுடன் சிறிதளவு தேன் கலந்து பேஸ்ட் செய்து கண்களுக்கு கீழ் தடவி மெல்ல அழுத்தம் கொடுத்து வட்ட வடிவில் சிறு சிறு வட்டங்களாக கண்களைச் சுற்றிலும் மசாஜ் செய்ய கண்கள் சோர்வடைவதை தவிர்ப்பதுடன் கரு வளையங்களையும் போக்கிவிடும்.

3) வெள்ளரிக்காயை வட்டமான துண்டுகளாக நறுக்கி கண்களுக்கு மேல் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுக்க கண்களுக்கு ஒரு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

4) பாதாம் பருப்பு இரண்டு எடுத்து சிறிது பாலுடன் சேர்த்து அரைத்து அந்த பேஸ்ட்டை கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மாயமாகிவிடும்.

5) ச்சையாக உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்து அரைத்து அதன் சாற்றை பஞ்சில் நனைத்து கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர கருவளையம் போய்விடும்.

6) லுமிச்சம் பழச்சாறு சிறிது தக்காளி பழச்சாறு சிறிது இரண்டையும் ஒன்றாக கலந்து இரண்டு மூன்று முறை கண்களைச் சுற்றி கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர கருவளையம் காணாமல் போய்விடும்.

7) ரவு தூங்கப் போகும் முன்பு விளக்கெண்ணையை இரண்டு சொட்டு எடுத்து இரண்டு கண்களையும் சுற்றி தடவி வர நல்ல உறக்கம் வருவதுடன் கண்களுக்கும் குளிர்ச்சி, கருவளையம் நீங்கவும் உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com