சீயக்காயின் பலன்கள்!

சீயக்காயின் பலன்கள்!

சீயக்காயுடன் எலுமிச்சைதோலை சேர்த்து அரைத்து பயன்படுத்த கூந்தல் வளர்ச்சிக்கு, பளபளப்பிற்கு உதவும்.

ரு கிலோ சீயக்காயுடன்உலர்ந்த எலுமிச்சை தோல்-50 கிராம், முழுபயறு-1/4கிலோ, வெந்தயம்-1/4கிலோ, பூலாங்கிழங்கு, 100கிராம், வெட்டி வேர்-10கிராம் இவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும். வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து, இந்த பொடியைப் போட்டு அலச, கூந்தல் மிருதுவாக மாறுவதோடு பளபளப்பாக இருக்கும்.

முகப்பரு ஏற்படுத்திய வடுவைப் போக்க தண்ணீரைக் கொதிக்க வைத்து 1/2மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் ஆவி பிடிக்க முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

வெந்தயத்தின் 50கிராம் பிஞ்சு கடுக்காயை சேர்த்து நைஸாக அரைக்கவும். இதில் 3டீஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு எலுமிச்சை சாற்றை பிழிந்து பேஸ்ட் ஆக்கவும். வாரம் இருமுறை இந்த பேக் போட்டு அலச கூந்தல் வளர்ச்சியை தூண்டும். பொடுகு, தலை அரிப்பை போக்கும்.

லுமிச்சை தோல்-10கிராம், இலவங்கம் -10கிராம், ஜாதிக்காய் -10 கிராம், மாசிக்காய் -10கிராம், சர்க்கரை _20 கிராம் இவற்றை ரவையாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியை தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவி நன்கு தேய்த்து பின் அலம்ப சருமம் இறுக்கமாகி, பளீரென மின்னும்.

ச்சை காய்கறிகள், பழங்கள் கீரைகள் சாப்பிட உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com