மெஹெந்தியை உடனே அழிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!

mehendi
mehendiIntel

பெண்களே இயற்கையாகவே அழகு தான். அதிலும் அணிகலன்கள், மருதாணி உள்ளிடவைகள் பெண்களை இன்னும் அழகாக்கும். பெண்களுக்கு இயல்பாகவே மருதாணி போடுவது ரொம்பவே பிடிக்கும். அதுவும் இப்போது மெஹெந்தி போடுவது ட்ரெண்டாகியுள்ளது.

அழகாக வேண்டுமென்ற டிசைன்களில் கை நிறைய பலரும் மெஹந்தி போட்டு கொள்கின்றனர். சமீபகாலமாக திருமணத்தில் கொண்டாடப்படும் இந்த மெஹந்தி விழா அதாவது ஹல்தி மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. அப்படி பெண்கள் ஆசை ஆசையாக மெஹந்தியை வைத்து கொள்கிறார்கள்.

ஆனால், சிலரின் அலுவலகங்களில் நீங்கள் மருதாணி வைத்திருந்தால் உங்கள் கைரேகை பதிவாகாது. அதனால் நீங்கள் வைத்த மருதாணியை அழிக்க விரும்புவீர்கள். ஆனால் மருதாணியோ கையில் இருந்து முழுமையாக நீங்க ஒரு வாரம் எடுத்துகொள்ளும். மேலும் பலருக்கு எதேதோ காரணங்களுக்காக மெஹ்ந்தியை அழிக்க வேண்டும் என தோன்றும். ஆனால் அது எப்படி என தெரியாமல் எந்நேரமும் கைகளை கழுவி கொண்டே இருப்பார்கள். இதோ அவர்களுக்காக சூப்பர் டிப்ஸ்.

சிறந்த சோப்பு:

ஆன்டிபாக்டீரியல் தன்மை கொண்ட சோப்பு கொண்டு கைகளை அடிக்கடி கழுவி வர சில நாட்களிலேயே மருதாணி மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறும் மெஹந்தி கரையை நீக்கும். எனவே எலுமிச்சை சாறை கைகளில் நேரடியாக அப்ளை செய்யலாம் அல்லது தண்ணீரில் பிழிந்து அதில் கைகளை 20 நிமிடங்கள் வைத்து கழுவினாலே போய்விடும்.

உப்பு:

கைகளில் உள்ள கறைகளை நீக்க உப்பு சிறந்த சுத்தப்படுத்தி. எனவே கல் உப்பை தண்ணீரில் கரைத்து அதில் கைகளை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் தேய்க்க கறை நீங்கும். கறை போகும் வரை தினமும் இப்படி செய்யுங்கள்.

ஸ்கிரப்பர்:

முகத்திற்கு அப்ளை செய்யும் ஸ்கிரப்பர் கொண்டு நன்கு தேய்க்க கறை நீங்கும். ஸ்கிரப் செய்யும் முன் வெதுவெதுப்பான நீரில் கைகளை 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் ஸ்கிரப் செய்யுங்கள்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடாவுடன் அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து பேஸ்ட் போல் கலந்து மெஹந்தி உள்ள இடங்களில் பேக் போல் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து சோப்பு கொண்டு கழுவவும். பின் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவுங்கள்.

ஆலிவ் ஆயில்:

ஆலிவ் எண்ணெயில் கல் உப்பு கரைத்து எண்ணெயை கைகளில் பஞ்சு தொட்டு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவி பின் ஸ்கிரப் க்ரீம் கொண்டு கைகளை கழுவ மெஹந்தி கரை நீங்கிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com