மஞ்சளைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால், வெள்ளை மஞ்சள் பற்றித் தெரியுமா? பூலாம் கிழங்கைதான் வெள்ளை மஞ்சள் என்பார்கள். இது நறுமணம் கொண்டது. சிறந்த கிருமிநாசினி ஆகும். இது இஞ்சி, மஞ்சள் இரண்டின் குணங்களையும் கொண்டது.
1. பாசிப் பயறு, பூலான்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இவற்றைச் சேர்த்து அரைத்துக் குளியல் பொடியாக பயன்படுத்த சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
2. பூலான் கிழங்குடன் தயிர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவ முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் நீங்கும்.
3. பூலாங்கிழங்கு பொடியுடன் தேன் கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வெய்யிலினால் ஏற்பட்ட கருமை நீங்கும்.