முகத்தில் சுருக்கமா கொய்யா போதுமே...

முகத்தில் சுருக்கமா கொய்யா போதுமே...

பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். ஆனால் அதற்கு எதிராக அவர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்படும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் வயதாகிய வுடன் ஒருவருடைய முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதை எப்படி தவிரப்பது என்று தெரியாது. ஆகவே ஒரு கொய்யா பழத்தை வைத்து எப்படி முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்கலாம் என   தெரிந்துக்கொள்வோம்.

கொய்யா சுவையாக இருப்பதைத் தவிர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் தருகின்றது. கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. இது இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது. இது தவிர ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

சுருக்கத்தை எப்படி தடுக்கும்?

கொய்யா வைட்டமின் சி மற்றும் லைகோபீன் இருப்பதால் இது இளமையான சருமத்தைப் பெற உதவுகிறது. கொய்யாவில் குறிப்பாக வைட்டமின்-சி அதிகம் உள்ளதால் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. கொலாஜன் நமது சருமத்தை மென்மையாகவும், சுருக்கமில்லாமல் வைத்திருக்கவும் காரணமாகிறது.இது சருமத்தின் நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.  

கொய்யாப்பழத்தில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் கரோட்டின், லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தில் ஏற்படும் சேதத்தை தடுக்கும். ஆகவே தினமும் ஒரு கொய்யப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com