
இன்று எந்த ஒரு பிரச்சனைகளையும் சமாதானமாக பேசி முடிப்பீர்கள். சிற்சில பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓரளவு நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்:இன்று உங்கள் வளர்ச்சியினால் உங்கள் தந்தை சந்தோஷம் அடைவார். மன நல ஆலோசகர்களாக இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குறிப்பாக மருத்துவ தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் ரசிகர்களால் போற்றப்படுவார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுதல்களும் கிடைக்கும்.
சதயம் 4ம் பாதம்:இன்று புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். கடன் கொடுக்காமல் முடிந்தவரை தவிர்க்கவும். பழைய கடன்களை சீரிய முயற்சியின் பேரில் படிப்படியாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:இன்று வியாபாரத்தில் நூதன யுக்திகளை புகுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் மானியத்துடன் கிடைக்கும். மனச் சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5