
இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம். எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அசுபதி:இன்று அடுத்தவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி நன்மதிப்பை பெறுவீர்கள். திடீர் செலவு ஏற்படலாம். மாணவர்கள் பாடங்களை ஆர்வமுடன் படிப்பீர்கள். உங்களது திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும்.
பரணி:இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான கிடைக்கும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைபடி பிள்ளைகள் செயல்படுவது மனதுக்கு இதமளிக்கும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
கிருத்திகை 1ம் பாதம்: இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6