கடகம் - 23-12-2022
இன்று மனதில் உற்சாகம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள் கிட்டும். பணகஷ்டம் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். சொத்து மனை வீடு சம்பந்தமான காரியங்களில் தாமதம் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும்.
புனர்பூசம் 4ம் பாதம்:இன்று வியாபாரத்தில் நூதன யுக்திகளை புகுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் மானியத்துடன் கிடைக்கும். மனச் சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
பூசம்:இன்று பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படுவீர்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். தாய் வழி உறவில் நன்மை வந்து சேரும்.
ஆயில்யம்:இன்று தேவைக்கேற்ப வருமானத்தை காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பெண்மணிகளுக்கு இன்று புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7