கடகம் - 30-12-2022

கடகம் - 30-12-2022

Published on

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

புனர்பூசம் 4ம் பாதம்:இன்று  மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.  மனதில் தைரியம் பிறக்கும்.

பூசம்:இன்று  சுக்கிரன் சஞ்சாரம் வாக்குவன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற  கிடைக்கும். தொழில் போட்டிகள் நீங்கும்.

ஆயில்யம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு  சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள். மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரத்து திருப்தி தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

logo
Kalki Online
kalkionline.com