
இன்று அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:இன்று பிள்ளைகளிடம் மிக எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லைகள் கடன்சுமைகள் அடங்கும். தாய் மாமனால் அனுகூலம் கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் இனிதே நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.
திருஓணம்:இன்று பொருளும் புகழும் கூடும். அரசியலில் தொல்லைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் படைப்பர். பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை.மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை.
அவிட்டம் 1, 2 பாதங்கள்:இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும்.கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு
மறையும்.கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். அண்டை அயலாருடன் இருந்து வந்த பிணக்கு மறையும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7