
இன்று கற்பனை வளமும் கலையார்வமும் அதிகரிக்கும். நட்பிற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:இன்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும்.
திருஓணம்:இன்று வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள் சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். உங்கள் கௌரவம் உயரும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்:இன்று உங்களின் பொருளாதார வலிமை கூடும்.அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்பு ஏற்படலாம். வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9