dina palan
dina palan

02-10-2022

ஞாயிற்றுக்கிழமை

மேஷம்

இன்று குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவ பூர்வமான அறிவு திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள்.

அசுபதி: உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

பரணி: பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.

கிருத்திகை 1ம் பாதம்: வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்

இன்று உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

ரோஹிணி: தேவையற்ற செலவு ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்

இன்று எதையும் எதிர்த்து நின்று சமாளிக்கும் திறமை உண்டாகும். மனம் குழப்பம் இன்றி தெளிவாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.

திருவாதிரை: பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழிசெய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய

முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்: வரவேண்டிய பணம் வந்து சேரும்.

பூசம்: முயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

ஆயில்யம்: திறமை வெளிப்படும். திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்

குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.

மகம்: உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.

பூரம்: எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். தெளிவான சிந்தனை இருக்கும்.

உத்திரம் 1ம் பாதம்: மனதில் உற்சாகம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கன்னி

இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து கூடும். பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் வெற்றி நிச்சயம்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும்.

ஹஸ்தம்: குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்

இன்று புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: சகோதரர் மூலம் நன்மை ஏற்படும்.

ஸ்வாதி: பிள்ளைகள் எதிர் காலம் குறித்து சிந்தனை மேலோங்கும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையும். நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்

இன்று புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனை பெறுவார்கள்.

விசாகம் 4ம் பாதம்: குடும்பத்தில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

அனுஷம்: மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம்.

கேட்டை: உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு

இன்று குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். நல்லது

கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர்கள்.

மூலம்: திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.

பூராடம்: கணவன், மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: அடுத்தவருக்கு ஆலோசனை சொல்ல போய் பிரச்சனை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

மகரம்

இன்று பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும். எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும்.

திருஓணம்: அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாய் இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம்

இன்று மாணவர்கள் எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை குறையும். தன்மையாக எல்லோரிடமும் பழகுவீர்கள். செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.

சதயம் 4ம் பாதம்: தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா என்ற எண்ணம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம்

இன்று நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும் மன தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும்.

பூரட்டாதி 4ம் பாதம்: கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும்.

உத்திரட்டாதி: எல்லாவித ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.

ரேவதி: குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com