dina palan
dina palan

03-10-2022

திங்கட்கிழமை

மேஷம்

இன்று வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

அசுபதி: கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பரணி: மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள்.

கிருத்திகை 1ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 5

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது.

ரோஹிணி: விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்

இன்று தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்கள் கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: வீண் அலைச்சல் ஏற்படும்.

திருவாதிரை: மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 3

கடகம்

இன்று எந்த ஒரு வேலையையும் நுணுக்கமாக செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும்.

புனர்பூசம் 4ம் பாதம்: உறவினர் உதவி கிடைக்கும்.

பூசம்: அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.

ஆயில்யம்: எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

சிம்மம்

இன்று இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

மகம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

பூரம்: நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

உத்திரம் 1ம் பாதம்: மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கன்னி

இன்று அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலை யில் கவனம் தேவை.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ஹஸ்தம்: வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

சித்திரை 1, 2 பாதங்கள்: அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்

இன்று மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் குறிக்கோளுடன் செயல்படுவீர்கள்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

ஸ்வாதி: வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: காரியங்களில் இருந்த தடைநீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்

இன்று எடுத்த காரியத்தை எத்தனை குறுக்கீடுகள் வந்தாலும் அதை சமாளித்து செய்து முடிப்பீர்கள். கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். கவனம் தேவை.

விசாகம் 4ம் பாதம்: செல்வம் சேரும்.

அனுஷம்: கல்வியில் திறமை வெளிப்படும்.

கேட்டை: வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 6

தனுசு

இன்று மற்றவர்களின் செயல்களால் மன அமைதி கெடவும் வாய்ப்பு உண்டு. பணவரத்து உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.

மூலம்: புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்ப்பீர்கள்.

பூராடம்: இரவு பகல் என பாராமல் உழைப்பீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்: எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்

இன்று புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

திருஓணம்: நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

கும்பம்

இன்று குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாக கிடைக்கும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும்.

சதயம் 4ம் பாதம்: கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

மீனம்

இன்று அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.

மாணவர்கள் சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.

பூரட்டாதி 4ம் பாதம்: திருமண முயற்சி கைகூடும்.

உத்திரட்டாதி: பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடல் நலம் சிறக்கும்.

ரேவதி: விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com