dina palan
dina palan

08-12-2022

வியாழக்கிழமை

மேஷம்

இன்று அடுத்தவர்களின் குறைகளை போக்க முற்படுவீர்கள். பயணத்தாலும் நன்மைகள் கிடைக்கும். தன ரீதியில் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அசுபதி: தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும்.

பரணி: உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள்  கிடைக்கும்.

கிருத்திகை 1ம் பாதம்: கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9



ரிஷபம்

இன்று வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் நிறுவன பங்குகள் உயரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய  அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.

ரோஹிணி: வீண் செலவை  உண்டாகும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்

இன்று உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு கௌரவம் அளிப்பார்கள். மேலிடத்திலிருந்து அனுகூலமான விஷயங்கள் நடக்கும். குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் மன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும்  காரியம் வெற்றியாகும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

திருவாதிரை: உத்தியோகம் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்

இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். வழக்குகளில் சமாதானமாக போவது நல்லது. நிலம் வீடு சம்பந்தமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பணவரத்து திருப்தி தரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்: பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

பூசம்: தனலாபம் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

ஆயில்யம்: எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

சிம்மம்

இன்று கலைத்துறையினருக்கு வெளிநாட்டு பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட  கூடுதல் செலவு ஏற்படலாம். தொழிலில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமானாலும் வந்து சேரும். உங்கள்  செயல்திறமை  வெளிபடும்.  தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம்  தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள்.

மகம்: தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும்.

பூரம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் வார தொடக்கத்திலும், இறுதியிலும் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.

உத்திரம் 1ம் பாதம்: குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி

இன்று அரசியல் துறையினருக்கு உங்களது  வார்த்தையின்  மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைபடி  உடனிருப்பவர்கள் கேட்டு செயல்படுவது  மனதுக்கு இதமளிக்கும். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம்  பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தை களின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.

ஹஸ்தம்: உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

சித்திரை 1, 2 பாதங்கள்: முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.  விருப்பங்கள்  கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9



துலாம்

இன்று மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.ஆன்மீக தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவுடன் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் ஏற்படும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பண வரத்து இருக்கும்.

ஸ்வாதி: பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர்.  உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9


விருச்சிகம்

இன்று எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். கட்டுப்பாடற்ற சுதந்திர எண்ணம் உண்டாகும். சிறிய விஷயங்களில் மனநிறைவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்  நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும்.

விசாகம் 4ம் பாதம்: சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.

அனுஷம்: மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.  பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும்.

கேட்டை: மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்களுக்கு புதிய வாகனம் வாங்கி கொடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும்.

மூலம்: உத்தியோகம் சிறக்கும். உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும்.

பூராடம்: எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். செம்பு, தங்க வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர்.

உத்திராடம் 1ம் பாதம்: வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5


மகரம்

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்தபடி  காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை  தரும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த எச்சரிக்கை தேவை.

திருஓணம்: வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: புதைபொருள் ஆராய்ச்சியில் உள்ளவர்கள் அரிய முயற்சிகளில் வெற்றி பெறுவர். குடும்பங்களில் குழந்தை பாக்யம் சந்தோஷப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9


கும்பம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனமாக செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக  எண்ணங்கள் அதிகரிக்கும்.  

அவிட்டம் 3, 4 பாதங்கள்: அரசுத் துறையில் பணி இடை நீக்கம் பெற்றவர்கள் மீட்சி பெறுவர். மனைவி வழியில் அனுகூலம் உண்டு.

சதயம் 4ம் பாதம்: குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குறைபாடு வரலாம்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த காலமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்

இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. அரசியல்துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்: அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும்.

உத்திரட்டாதி: உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும். வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம்.

ரேவதி: நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் போதும் கவனத்துடன் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com