தினப்பலன்
தினப்பலன்

10-11-2022

வியாழக்கிழமை

மேஷம்

இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

அசுபதி:இன்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

பரணி: பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம்.

கிருத்திகை 1ம் பாதம்:எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்:வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்.

ரோஹிணி: பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் ஏற்படும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:நன்மைகளும் கெடுதல்களும் இணைந்து இருக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்

இன்று நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: உறவினரால் தொல்லைகள் ஏற்படலாம்.

திருவாதிரை:  உடல்நலம் பாதிக்கப்படலாம்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:தனியாரில் வேலை செய்பவர்களுக்கு சில சோதனைகள் ஏற்படலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்

இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.

புனர்பூசம் 4ம் பாதம்:உங்களுக்குண்டான உரிய கௌரவம் கிடைக்கும்.

பூசம்:இன்றைய நாள் சுமாராக இருக்கும்.

ஆயில்யம்:பொருளாதார பலம் உண்டாகும்.

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்

இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய கசப்புகள் மாறும்.

மகம்:அன்றாடப் பணிகள் சிறப்பாக நடைபெறும்.

பூரம்: வித்தைகள் சம்பந்தப்பட்ட படிப்புகள் சார்ந்தவர்களுக்கு நல்ல நாளாக அமையும்.

உத்திரம் 1ம் பாதம்:குடும்பத்தில் சச்சரவு ஏற்பட வழிவகை செய்து கொடுக்க வேண்டாம்

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி

இன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: கொடுக்கல் வாங்கலில் சச்சரவு ஏற்படாமலிருப்பதற்கு கவனம் தேவை.

ஹஸ்தம்:இன்று உங்கள் அந்தஸ்து சிறப்படையும்.

சித்திரை 1, 2 பாதங்கள்:ஆதாயங்கள் கிடைக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

துலாம்

இன்று எதிர்ப்புகள் அகலும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் துரிதமாகவும் சரியாகவும் நடைபெறும்.

ஸ்வாதி: உங்களால் ஆன உதவிகளை செய்து வந்தால் நல்ல பல பலன்களைப் பெறலாம்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பொதுவாக நற்பலன்கள் கிடைக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்

இன்று தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும்.

விசாகம் 4ம் பாதம்:இன்று தொல்லைகள் குறையும்.

அனுஷம்:எந்த பிரச்சனையிலும் வெற்றி பெற வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.

கேட்டை: சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

தனுசு

இன்று அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். அதேநேரம் தான் உண்டு தன் வேலையுண்டு என்கிற ரீதியில் பணியாற்றி அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் ஒதுங்கி இருங்கள். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும்.

மூலம்: பொருளாதார சுபிட்சம் சிறப்பாக இருக்கும்.

பூராடம்:உதவிகள் கிடைக்கும் நண்பர்கள் உறவினர்கள் என பல வகைகளிலும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்:  லாபம் கிடைக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்

இன்று உடன்பணிபுரிவோர் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். மற்றபடி போட்டிகளை சாதுர்யமாக சமாளிக்கவும். மேலும் படிப்படியாகத்தான் வளர்ச்சி உண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:உங்களுக்குண்டான கௌரவம் உயரும்.

திருஓணம்:வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: உடன் பணி புரிவோரால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சுமூகமான முறையில் அது மறையும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்

இன்று ஓரளவு வருமானத்தைக் காண்பீர்கள். பலரின் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். மற்றபடி பணியாட்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் இருக்கவும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:வெற்றிகள் காண்பீர்கள்.

சதயம் 4ம் பாதம்:செய்த முயற்சிகளை மீண்டும் மீண்டும் செய்யுங்கள்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உங்களுக்கான லாபங்கள் வந்து சேரும்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மீனம்

இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். பேச்சாற்றல் அதிகரிக்கும். துறையில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்துவீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்:குடும்பத்தினரால் ஏற்றம் காண்பீர்கள்

உத்திரட்டாதி: மேலோரால் ஆசீர்வாதங்கள் பூரணமாகக் கிடைக்கும்.

ரேவதி: பெற்றோர்கள் நலத்தில் கவனம் தேவை.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com