dina palan
dina palan

13-10-2022

வியாழக்கிழமை

மேஷம்

இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அசுபதி: இன்று உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும்.

பரணி: வெளியூர் பயணம் ஏற்படும்

கிருத்திகை 1ம் பாதம்: அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

ரிஷபம்

இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான  காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும்.  புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: குருவின் பலத்தால் பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம்.

ரோஹிணி: இருந்து வந்த தடைகள் அகலும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: உங்கள் முயற்சிகளில் வெற்றியும் பொருளாதார வளமும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும்.

திருவாதிரை: சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: பெண்களால் அனுகூலம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

கடகம்

இன்று எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள். குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும்.

புனர்பூசம் 4ம் பாதம்: மிகவும் உதவிகரமாக இருப்பர்.

பூசம்: குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஆயில்யம்: வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்

இன்று சோர்வில்லாமல் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும்  புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.  வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.

மகம்: மாத பிற்பாதியில் புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும்.

பூரம்: வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

உத்திரம் 1ம் பாதம்: உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும்.  சக ஊழியர்கள் மேல்  அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும்.

ஹஸ்தம்: உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர்.

சித்திரை 1, 2 பாதங்கள்: வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

துலாம்

இன்று குடும்பத்தில்  கணவன், மனைவிக் கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத் துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

ஸ்வாதி: அலைச்சல் இருக்கும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

விருச்சிகம்

இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில்  வெற்றி வாய்ப்பு உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனகுழப்பம் உண்டாகலாம்.

விசாகம் 4ம் பாதம்: உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு.

அனுஷம்: உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.

கேட்டை: இன்று எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு

இன்று பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.  அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான  நோய் ஏற்படலாம்.  பணவரத்து இருக்கும்.  பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும்.

மூலம்: பணவரவு அதிகரிக்கும்.

பூராடம்: புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மகரம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன்  வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது  கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.

திருஓணம்: அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

கும்பம்

இன்று காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

சதயம் 4ம் பாதம்: தமப்திகளிடையே அன்பு மேலோங்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

மீனம்

இன்று மனஅமைதி உண்டாகும். எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமை மேலோங்கும். பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள்.  
பூரட்டாதி 4ம் பாதம்: வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

உத்திரட்டாதி: விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள்.

ரேவதி:  வாகன பிராப்தி உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com