மேஷம்
இன்று எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.
அசுபதி:இன்று எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள்.
பரணி: வீண் பேச்சு கூடவே கூடாது.
கிருத்திகை 1ம் பாதம்:வியாபார ரீதியாக போட்டிகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
ரிஷபம்
இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.
ரோஹிணி:வம்பு வழக்கு கூடவே கூடாது.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
மிதுனம்
இன்று வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:பெற்றோரது ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவாதிரை:வெளிவட்டடரத்தில் மதிப்பு மரியாதை உயரும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:எந்த மனிதரையும் விமர்சனம் வெளியில் வைத்து விமர்சனம் செய்ய வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
கடகம்
இன்று தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.
புனர்பூசம் 4ம் பாதம்:அரசு விஷயாதிகளில் நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடிக்கவும்
பூசம்:புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
ஆயில்யம்:பிரியமானவர்களிடம் அடிக்கடி உரையாடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
சிம்மம்
இன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.
மகம்:சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள்.
பூரம்:வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் சந்தர்பம் அறிந்து செயல்படுங்கள்.
உத்திரம் 1ம் பாதம்: பங்குதாரர்களை அனுசரித்து போகவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
கன்னி
இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடவே கூடாது.
ஹஸ்தம்:நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனைகள் பெற்று காரியங்களில் இறங்கவும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
துலாம்
இன்று மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: இடமாறுதல் கிடைக்கும்.
ஸ்வாதி: அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: மணமாகாதவர்களுக்கு மணமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
விருச்சிகம்
இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம்.
விசாகம் 4ம் பாதம்: சுபச்செலவுகள் இருக்கும்.
அனுஷம்: குழந்ததயில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும்.
கேட்டை:வீடு வாகனம் மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9, 3
தனுசு
இன்று திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படும்.
மூலம்:மேற்படிப்பு விஷயமாக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனமாக செயல்படவும்.
பூராடம்: முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
உத்திராடம் 1ம் பாதம்: மாணவமணிகளுக்கு உயர்கல்வி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6
மகரம்
இன்று உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: நினைத்த மதிப்பெண்களை கொஞ்சம் முயற்சி செய்தால் அள்ளலாம்.
திருஓணம்: கலைஞர்கள் விருதுகள் பெறுவார்கள்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்:உங்கள் பராக்கிரமம் வெளிப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
கும்பம்
இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: செயலில் வேகம் பிறக்கும்.
சதயம் 4ம் பாதம்:அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: அரசியல்வாதிகள் அரசுப்பணியாளர்கள் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்கள் ரசாயனத் துறைகளில் உள்ளவர்கள்
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7
மீனம்
இன்று எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.
பூரட்டாதி 4ம் பாதம்:விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் துறைகளில் வளர்ச்சி காண்பார்கள்.
உத்திரட்டாதி: மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள்.
ரேவதி: கலைத்துறையினர் எண்ணம் ஈடேறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6