dina palan
dina palan

15-11-2022

செவ்வாய்கிழமை

மேஷம்

இன்று பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.

அசுபதி: இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது

பரணி: அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில்  ஈடுபடுவது நன்மை தரும்.
கிருத்திகை 1ம் பாதம்: நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்

இன்று செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
ரோஹிணி: குழப்பங்கள் நீங்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மிதுனம்

இன்று சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:  வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
திருவாதிரை:   மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: பணவரத்து தாமதமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

கடகம்

இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.

புனர்பூசம் 4ம் பாதம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும்.

பூசம்: தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  எதிலும்  எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல்

ஆயில்யம்: ஆலோசித்து  செயல்படுவது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்டஎண்கள்: 5, 6

சிம்மம்

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.

மகம்:  அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.
பூரம்: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
உத்திரம் 1ம் பாதம்: சந்திரன் சஞ்சாரம் சிற்றின்ப சுகத்தை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி

இன்று வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. இல்லற சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும்.
ஹஸ்தம்: உங்களது பேச்சை  மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்வார்கள்.

சித்திரை 1, 2 பாதங்கள்: எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து  முடிவில் சாதகமான பலன்தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

துலாம்

இன்று திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.  மாணவர்கள் பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.
ஸ்வாதி: கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்

இன்று நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள்.

விசாகம் 4ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம்: குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.
கேட்டை: பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

தனுசு

இன்று பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும்.

மூலம்: காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப்படும்.
பூராடம்: எதிர்பாராத திருப்பமும் உண்டாகும்.
உத்திராடம் 1ம் பாதம்: முன்பு கிடைத்த அனுபவம் இப்போது கை கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மகரம்

இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பொறுப்புகள் கூடும்.
திருஓணம்: எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: காரிய தடை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்டஎண்கள்: 1, 3

கும்பம்

இன்று கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: ஏற்கனவே  பாதியில் நின்ற பணிகள் நடக்கும்.
சதயம் 4ம் பாதம்: தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைபளு வீண் அலைச்சல் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மீனம்

இன்று கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.  மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.


பூரட்டாதி 4ம் பாதம்: பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது.
உத்திரட்டாதி: புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

ரேவதி:   நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com