
இன்று புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம்
அஸ்வினி: பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை.
பரணி: உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.
க்ருத்திகை: பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.
இன்று வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரிகளிக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள்.
க்ருத்திகை: சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும்.
ரோகினி: கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.
ம்ருகசீரிஷம்: சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
இன்று பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு எந்த நிலையிலும் மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துவது நல்லது.
ம்ருகசீரிஷம்: அரசியல் துறையினருக்கு சில நற்பலன்களை ஏற்பட்டாலும் சிறு மனகஷ்டமும் உண்டாகும்.
திருவாதிரை: எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது.
புனர்பூசம்: குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
இன்று வெற்றிகளைக் குவித்து வாழ்வில் வசந்தம் வீசப் போகும் நாளிது. குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.
புனர்பூசம்: குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
பூசம்: எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம்.
ஆயில்யம்: கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
இன்று நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம்.
மகம்: தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
பூரம்: போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
உத்திரம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவதுபடி நடந்து கொள்வது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளுக்கு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நாளிது. தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
உத்திரம்: நிலுவையில் உள்ள பணம் வரலாம்.
ஹஸ்தம்: எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும்.
சித்திரை: எதிலும் வெற்றியும் சந்தோஷமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
இன்று மிகவும் சிறப்பான காலகட்டமாகவே இருக்கிறது என சொல்லலாம். பொருளாதார வளமும்
பெண்களால் அனுகூலமும் கிடைக்கும். இருந்தாலும் அவ்வப்போது பொருள் இழப்பும், சிறுசிறு உடல் உபாதைகளும் ஏற்படலாம். இவ்வளவு நாட்களாக இருந்து வந்த பிள்ளைகளால் பிரச்சனை நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்தாலும் மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவும். பல்வேறு நன்மைகள் நிகழும். உங்கள் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். அதே வேளையில் காலகட்ட பிற்பகுதியில் பொருள் விரையமும் வேலையில் பிந்தங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். ஆனாலும் அவையனைத்தும் சுபவிரையமும் என கொள்ளுங்கள்.
சித்திரை: பணம் வருவது அதிகரிக்கும்.
ஸ்வாதி: எதிர்ப்புகள் அகலும்.
விசாகம்: நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
இன்று எந்த பிரச்சனைகளையும் முறியடிக்கும் வல்லமைகளும் பெறலாம். குடும்பத்தில் வசதிகள் தொடரும். ஆடம்பர பொருட்கள் சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். சற்று சிரத்தை எடுத்தால் சாதனைகள் செய்யலாம். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். மிகவும் சிறப்பான பலன்களைப் பெற போகிறீர்கள். சிற்சில குழப்பங்கள் வந்தாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். அனைத்தும் நன்மையே கிடைக்கும். பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். குறிப்பாக பொருளாதார வளம் அதிகரிக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும் .
விசாகம்: குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
அனுஷம்: வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கேட்டை: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
இன்று காரிய அனுகூலம் கிடைக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தடைப்பட்ட ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கடந்த காலமாக தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும். நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப்
பெறுவர். விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.
மூலம்: மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.
பூராடம்: உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும்.
உத்திராடம்: கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் பிந்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வு போன்றவை கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலையின்றி தவிக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு கடந்த காலத்தை விட சிறப்பான லாபம் கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம்
உத்திராடம்: பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.
திருவோணம்: தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும்.
அவிட்டம்: சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
இன்று நன்மைகள் கிடைக்கும். பலவிதமான துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் அதை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். சுப நிகழ்ச்சிகள் உடனடியாக நிறைவேறாமல் போகலாம். அனைத்தும் சுபமாக நிகழும். உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து
சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்.
அவிட்டம்: பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.
சதயம்: துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
பூரட்டாதி: உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
இன்று எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்து விடவேண்டாம். வியாபாரிகள் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். கலைஞர்கள் சீரான நிலையில் இருப்பார். பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலங்களை விட அதிகம் இருக்கும்.
பூரட்டாதி: மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.
உத்திரட்டாதி: காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.
ரேவதி: தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7