18-10-2022

செவ்வாய்க்கிழமை
dina palan
dina palan
Published on

மேஷம்

இன்று கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.  குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன தைரியம் உண்டாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து  முடிப்பீர்கள். உங்களது நற்செயல்கள் மூலம் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பணவரத்து குறைவின்றி இருக்கும். தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் லாபமில்லாத ஆதாய மில்லாத வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓயாத உழைப்பும் குறைவான பலனும் ஏற்படும். வாழ்க்கை துணையின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன் மருத்துவ செலவும் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்படலாம் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் பெருமை சேரும்.
அஸ்வினி: கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
பரணி: குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும்.
க்ருத்திகை: வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ரிஷபம்

இன்று நல்ல காரியங்கள் செய்வதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள், உறவினர்கள் மூலம் கிடைக்கும். அடுத்தவர் செய்யும் தவறுகளை மன்னித்து அதனால் நற்பெயர் பெறுவீர்கள். திடீர் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு மறையும். எதைப்பற்றியாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். மன தைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும்.  நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும்.  போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும்.
க்ருத்திகை: மனசஞ்சலம் நீங்கும்.
ரோகினி: செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும்.
ம்ருகசீரிஷம்: வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்

இன்று அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சொத்து விவகாரங்களில் காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படலாம். எதிலும் கூடுதல் கவனம் தேவை. திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். முக்கியநபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்க பெறலாம். பணவரத்து அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் எதிலும் துணிச்சலான முடிவு எடுப்பீர்கள்.
ம்ருகசீரிஷம்: தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.  
திருவாதிரை: உடல்நலபாதிப்பு உண்டாகலாம்.
புனர்பூசம்: பண பற்றாக்குறை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கடகம்

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி வேகம் பிடிக்கும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் மனவருத்தம் உண்டாகலாம். திருமண முயற்சி மேற்கொள்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.  வீண் ஆசைகள் தோன்றலாம் கட்டுப்படுத்துவது நல்லது. திட்டமிட்டு செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.  துணிச்சலாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகம் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். பணவரத்து உண்டாகும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும்.
புனர்பூசம்: தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள்.
பூசம்: புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் நல்ல மாற்றம் வரும்.
ஆயில்யம்: குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

சிம்மம்

இன்று தொழில் வியாபாரத்தில் மந்தமான  போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.  தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும்.  எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  
மகம்: உடல் நலத்தில் கவனம் தேவை.
பூரம்: பணதேவை உண்டாகும்.
உத்திரம்: செயல்திறன் வெளிப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி

இன்று பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். வெளிநாடு தொடர்பான பிரச்சனைகள்  நீங்கும். திறமை வெளிப்படும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும் பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தாமதம் நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலை களை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்த மடையும் சம்பவங்கள் ஏற்படலாம்.  பிள்ளைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நெருக்கமானவர்களுடன் ஏற்படும் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.
உத்திரம்: புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
ஹஸ்தம்: காரிய தடை தாமதம் அகலும்.
சித்திரை: மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

துலாம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும். அரசுத் துறையிலிருந்து சலுகைகளைப் பெற குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக்  கொள்ளுங்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம்   செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள்.
சித்திரை: ஆரோக்கியம் மேம்படும்.  
ஸ்வாதி: தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
விசாகம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7

விருச்சிகம்

இன்று வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி  பெறுவீர்கள். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள்   சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேசிவிடலாம். அதனால் உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள  வேண்டாம். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும்.  யோகா, ப்ராணாயாமம்  போன்றவற்றை செய்து உடல் நலத்தையும், மன  வளத்தையும்  பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள்  அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி   நலமடைவார்கள்.
விசாகம்: உழைப்பு அதிகமாகும்.
அனுஷம்: குடும்பத்தில் பிரச்சனை சரியாகும்.
கேட்டை: குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு

இன்று உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள். மற்றபடி எவருக்கும் உங்கள் பெயரில் பணம்   வாங்கித் தர வேண்டாம். மேலும் அவசியமான பயணங்களையே மேற்கொள்ளவும். புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம். . எதிர் பாலினத்தாரால்  லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். சிலருக்கு ரியச் எஸ்டேட்   துறைகளின் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
மூலம்: எந்த ஒரு  சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
பூராடம்: அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.
உத்திராடம்: சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருநீலம்
அதிர்ஷ்ட எண்: 5

மகரம்

இன்று வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது  வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல்   அதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது   நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.
உத்திராடம்: வீண் அலைச்சல் நீங்கும்.
திருவோணம்: அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.
அவிட்டம்: தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட், வெண்பட்டு
அதிர்ஷ்ட எண்: 1, 2

கும்பம்

இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு   உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது. முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும்.  பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றபடி முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள  வேண்டாம். புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். உழைப்பு மட்டுமே   நன்மைகளைக் கொடுக்கும் என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அவிட்டம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும்.
சதயம்: குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும்.
பூரட்டாதி: அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 6

மீனம்

இன்று ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்தாலும் பண வரவுக்கு   தாமதம் ஏற்படலாம். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது   கவனம் தேவை. தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும்.  செல்வம் சேரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரம் கடந்து உழைத்து சில பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். வெளியூர்  பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள்  பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பார்கள். மன தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம்  அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி: காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் நீங்கும். பயணம் செல்ல நேரலாம்.
உத்திரட்டாதி: எதிர்ப்புகள் விலகும்.  
ரேவதி: பயணத்தின்  மூலம் லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com