dina palan
dina palan

19-12-2022

திங்கட்கிழமை

மேஷம்

இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது.  சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும்.

அசுபதி:இன்று எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்ள நேரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த வேகம் குறையும்.  எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில்  தாமதம் ஏற்படலாம். பார்ட்னர்கள் மூலம் தடங்கல் உண்டாகலாம் கவனம் தேவை.

பரணி:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் தடைகளையும் தாமதத்தையும் சந்திக்க நேரலாம்.  மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.  புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தாமதமான பலன் கிடைக்கும்.

கிருத்திகை 1ம் பாதம்:இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாக பேசுவதும் நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

ரிஷபம்

இன்று தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தோயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்:இன்று மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரோஹிணி:இன்று எதிர்ப்புகள் குறையும். காரியத்தில் ஏற்பட்ட தடை தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள் தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:இன்று தொழில் வியாபாரம்  தொடர்பான  போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும் புதிய  ஆர்டர்கள்  பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்

இன்று மிகவும் நன்றாக இருக்கும். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். பணவரத்து தாமதமாகும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:இன்று குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின்  நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள்.   மனநிம்மதி  உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும்.

திருவாதிரை:இன்று எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்கள்  கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:இன்று காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.  புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். வீண்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும்.  உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

கடகம்

இன்று அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். 

புனர்பூசம் 4ம் பாதம்:இன்று பேச்சு திறமை கை கொடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும்

பூசம்:இன்று உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும்.

ஆயில்யம்:இன்று கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். உங்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்டஎண்:  4, 6

சிம்மம்

இன்று எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும்.  எதிர்ப்புகள் நீங்கும்.  தைரியம் கூடும். பணவரத்து திருப்திதரும். அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும்.

மகம்:இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

பூரம்: மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது.

உத்திரம் 1ம் பாதம்:இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி

இன்று வீண்செலவு காரிய தடை ஏற்படும். எனினும் முயற்ச்சித்தால் செல்வ சேர்க்கையும் எதிலும் வெற்றியும் கிடைக்கும். எதிலும் வேகம் காட்டுவீர்கள். உல்லாச பயணம் செல்ல நேரிடும். சொந்த பந்தங்களிடம் அளவுடன் பழகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:இன்று குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

ஹஸ்தம்:இன்று மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.

சித்திரை 1, 2 பாதங்கள்:இன்று வீண் அலைச்சல் காரிய தடை சந்திக்க நேரலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

துலாம்

இன்று வியாபாரம் தொடர்பான செலவும் இருக்கும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். உத்தியோகம் நிமித்தமாக இடமாற்றம் ஏற்படும். உங்களுக்கான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்து பாராடுகள் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்:இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

ஸ்வாதி:இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும்

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம். . நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

விருச்சிகம்

இன்று சற்று எச்சரிக்கையுடன்  எதையும் செய்வது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் முழு கவனத்துடன் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்யம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அடுத்தவர்களுக்காக விட்டு கொடுத்து செல்வீர்கள். உத்தியோகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். மனதில் ஏதேனும் கவலை இருக்கும்.  வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.

விசாகம் 4ம் பாதம்:இன்று எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

அனுஷம்:இன்று வீண் அலைச்சலும் எதிலும் தடை தாமதம் உண்டாகும். மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும்.

கேட்டை:இன்று அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.  மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

தனுசு

இன்று உடல் உழைப்பு அதிகமாகும். புதுதெம்பும் உற்சாகமும் உண்டாகும். புதிய பதவி தேடிவரும். பண கஷ்டம் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எனினும் யோகமான பலன்கள் நடைபெறும். எதிர்ப்புகள் விலகும் தொழில் வியாபார போட்டிகள் நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை.

மூலம்:இன்று வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள் புதிய ஆடர் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை.

பூராடம்: வீண் அலைச்சல் காரிய தாமதம் உண்டாகலாம்.வேலைக்குச் செல்பவர்கள் உடன் பணிபுரிபவர்களுடன் நிதானமாக பேசுவது நல்லது.

உத்திராடம் 1ம் பாதம்:இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமையுடன் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

மகரம்

இன்று சகோதர வழியில் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.  மற்றவர்கள் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் உண்டாகலாம். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மையை தரும். நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு  உண்ண வேண்டி இருக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.
திருஓணம்:இன்று மனதில் நினைத்த காரியத்தை சிரத்தையுடன் செய்து முடிப்பீர்கள். அதனால் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்துவது நல்லது

அவிட்டம் 1, 2 பாதங்கள்:இன்று தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும். ஆன்மீக தலங்கள் சென்று வருவீர்கள். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்டஎண்: 2, 3

கும்பம்

இன்று வாழ்க்கைதுணை அனுகூலமாக இருப்பார்.  மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளின் போதும் வாகனத்தில் செல்லும் போதும் கவனமாக இருப்பது நல்லது. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கலைத்துறையினருக்கு கவனம் தேவை.  உறவினர்கள் வருகை இருக்கும். வீடு - மனை - வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

 அவிட்டம் 3, 4 பாதங்கள்:இன்று கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள்  அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும்.

சதயம் 4ம் பாதம்:இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம் நெருப்பு ஆகியவற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மீனம்

இன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் ஓயாத வேலையும்  அலைச்சலும் இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உத்தியோக மாற்றம் உண்டாகலாம். செலவு அதிகரிக்கும்.   பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்:இன்று புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

உத்திரட்டாதி:இன்று தடை தாமதம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நல்லது. மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். எந்த நிலையிலும் அடுத்தவர் பற்றி ரகசியங்களை வெளியே சொல்லாமல் மனதில் வைத்துக்கொள்வது நல்லது.

ரேவதி:இன்று எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com