dina palan
dina palan

23-10-2022

ஞாயிற்றுக்கிழமை

மேஷம்

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்.

அசுபதி: இன்று வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள்.அலைச்சல்கள் வரலாம்.

பரணி: அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும்.

கிருத்திகை 1ம் பாதம்: பணப்புழக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 2, 3

ரிஷபம்

இன்று கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. பெண்கள் எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர்.

ரோஹிணி: கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: இன்று மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம்

இன்று தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன்களும் லாபங்களும் கிடைக்கும். ஆனாலும் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: புதிய வீடு மனை வங்க தடைகள் ஏற்படலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.

திருவாதிரை: பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்

இன்று தம்பதிகளுக்குள் தருணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.

புனர்பூசம் 4ம் பாதம்: சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பூசம்: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் இறுதியில் தீரும்.

ஆயில்யம்: பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1,2

சிம்மம்

இன்று நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங் களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். செய் தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.

மகம்: சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும்.

பூரம்: பணவரத்து திருப்தி தரும்.

உத்திரம் 1ம் பாதம்: தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 9

கன்னி

இன்று வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும்.

ஹஸ்தம்: எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும்

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

துலாம்

இன்று வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும்.

ஸ்வாதி: எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பணவரத்து மனமகிழ்ச்சியை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

விருச்சிகம்

இன்று எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லது. மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

விசாகம் 4ம் பாதம்: நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும்.

அனுஷம்: இன்று எதிர்ப்புகள் நீங்கும்.

கேட்டை: எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 2, 9

தனுசு

இன்று சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.

மூலம்: விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும்.

பூராடம்: வாக்கு வன்மை நன்மையை தரும்.

உத்திராடம் 1ம் பாதம்: தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9,3

மகரம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் எரிச்சல் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மை தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும்

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

திருஓணம்: எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

கும்பம்

இன்று பெண்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது. பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இன்று குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

சதயம் 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்

இன்று வெளியூர் பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பார்கள். மன தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும்.

பூரட்டாதி 4ம் பாதம்: பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.

உத்திரட்டாதி: அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும்.

ரேவதி: மனகஷ்டம் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 5

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com