23-11-2022

புதன்கிழமை
dina palan
dina palan

மேஷம்

இன்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் சிற்றின்ப சுகத்தை தரும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும்.   உங்களது பேச்சை  மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்வார்கள்.  எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து  முடிவில் சாதகமான பலன்தரும்.  

அசுபதி: இன்று பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.
பரணி: வாகன பிராப்தி உண்டு.
கிருத்திகை 1ம் பாதம்: வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்

இன்று வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம்.
ரோஹிணி: பதவி உயர்வு சம்பள் உயர்வு போன்றவை இருக்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்டஎண்: 4, 6

மிதுனம்

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்ப கவலை உண்டாகும். கணவன் மனைவிக் கிடையே  இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர்.
திருவாதிரை: வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

கடகம்

இன்று காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பமும் உண்டாகும். முன்பு கிடைத்த அனுபவம் இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும்.  எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

புனர்பூசம் 4ம் பாதம்: தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.
பூசம்: கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.
ஆயில்யம்: உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம்

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

சிம்மம்

இன்று காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும். அடுத்த வரைநம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும்.   ஏற்கனவே  பாதியில் நின்ற பணிகள் நடக்கும். ராசியாதிபதி  சூரியன் சஞ்சாரத்தால் விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம்.

மகம்: மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும்.
பூரம்: அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும்

உத்திரம் 1ம் பாதம்: சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

கன்னி

இன்று தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும்.   உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைபளு வீண் அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக  வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள். 

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள்.
ஹஸ்தம்: வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்

இன்று கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை.  பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது. பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள். 

சித்திரை 3, 4ம் பாதங்கள்: வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள்.
ஸ்வாதி: நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பணப்புழக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

விருச்சிகம்

இன்று கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். பல யோகங்கள் உண்டாகும்.   நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில்  வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

விசாகம் 4ம் பாதம்: செல்வாக்கு ஓங்கும்.
அனுஷம்: தமபதிகளிடையே அன்பு மேலோங்கும்.
கேட்டை: குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

தனுசு

இன்று எந்தஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு   கண்மூடி தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.

மூலம்: பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
பூராடம்: நல்ல வரன் கிடைக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன், மனைவிக் கிடையே இதமான உறவு காணப்படும்.  பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.
திருஓணம்:  வாகன பிராப்தி உண்டு.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

கும்பம்

இன்று எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது. எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்.
சதயம் 4ம் பாதம்: இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம்

 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

மீனம்

இன்று சந்திரன் சஞ்சாரம் பல வகையிலும் நற்பலன்களை தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். ராசியாதிபதியின் சஞ்சாரத்தால் கவனமாக பேசுவது நல்லது.  வீண்பழி உண்டாகலாம்.

பூரட்டாதி 4ம் பாதம்: சம்பள உயர்வு கிடைக்கும்.
உத்திரட்டாதி: சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
ரேவதி: இன்று வீடு மனை வாங்க தடை சுபகாரியம் செய்வதற்கு தடை நற்செயல்கள் எது

செய்வதற்கும் தடையாக  இருந்து வந்தது. இனி அது மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com