dina palan
dina palan

24-10-2022

திங்கட்கிழமை

மேஷம்

இன்று எதிலும் நிதானமாக செயல்படுவதுடன் அடுத்தவரின் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பது நல்லது. எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும்.

அசுபதி: இன்று சுதந்திரமாகப் பணியாற்றி வெற்றிவாகை சூடுவீர்கள்

பரணி: தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

கிருத்திகை 1ம் பாதம்: தங்கள் மேல் நல்ல மதிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

ரிஷபம்

இன்று திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும்.

ரோஹிணி: உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

திருவாதிரை: இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கடகம்

இன்று கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. பிள்ளைகள் கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பார்கள்.

புனர்பூசம் 4ம் பாதம்: உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

பூசம்: உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும்.

ஆயில்யம்: எனினும் தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

சிம்மம்

இன்று பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும். வீண் அலைச்சல் திடீர் டென்ஷன் ஏற்படலாம். காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டுபின்னர் முடியும். உடல் பலவீனம் உண்டாகலாம். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும்.

மகம்: வெளியூர் பயணம் ஏற்படும். குருவின் பலத்தால் பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம்.

பூரம்: உங்கள் முயற்சிகளில் வெற்றியும் பொருளாதார வளமும் வந்து சேரும்.

உத்திரம் 1ம் பாதம்: உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி

இன்று குடும்ப வாழ்க்கையில் சுகமும், நிம்மதியும் கிடைக்கும். பதவி மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகலாம். கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சிறு குழப்பங்களையும் ஏற்படுத்தி வருவார். மனகஷ்டம், பணகஷ்டம் தீரும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும்

ஹஸ்தம் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: பெண்களால் அனுகூலம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

துலாம்

இன்று சொல்லாற்றலும் செயலாற்றலும் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். தடைபட்ட

காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மன குழப்பங்கள் அவ்வப்போது வந்தாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: இருப்பதை வைத்து மகிழ்ந்துடுவீர்கள்

ஸ்வாதி: குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: மகிழ்ந்துடுவீர்கள் இறைபக்தி அதிகமாகும்

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

விசாகம் 4ம் பாதம்: மிகவும் உதவிகரமாக இருப்பர்.

அனுஷம்: வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

கேட்டை: சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு

இன்று தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும்.

மூலம்: உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர்.

பூராடம்: உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர்.

உத்திராடம் 1ம் பாதம்: வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்

இன்று உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: அலைச்சல் இருக்கும்.

திருஓணம்: வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கும்பம்

இன்று கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு உதவும். வேலையை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. எந்த வேலையையும் திட்டமிட்டு செய்வது நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும்.

சதயம் 4ம் பாதம்: தள்ளிப் போடுதலும் கூடாது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம் உரிமை அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்

இன்று கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. எதிரிகள் தொல்லை குறையும். வியாபாரம், தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கும். எங்கும் எதிலும் நன்மையே உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்திரட்டாதி: நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு.

ரேவதி: செல்வாக்கு ஓங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com