25-09-2022

ஞாயிற்றுக்கிழமை
dina palan
dina palan
Published on

மேஷம்

இன்று கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை. எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும். நேரத்திற்கேற்றார் போல் வளைந்து கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.

அஸ்வினி: பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

பரணி: சுபச் செலவு ஏற்படலாம்.

க்ருத்திகை: பயணத்தின் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம்

இன்று கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். பணவரத்தை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும்எதிர்ப்புகள் நீங்கி காரிய

அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

க்ருத்திகை: வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.

ரோகினி: தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும்.

மிருகசீரிஷம்: தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மிதுனம்

இன்று குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.

மிருகசீரிஷம்: எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரத்தும் இருக்கும்.

திருவாதிரை: தொழிலாளர்களால் மிகுந்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

புனர்பூசம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம்

இன்று மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

புனர்பூசம்: எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

பூசம்: மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும்.

ஆயில்யம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.

மகம்: சக ஊழியர்களால் உதவியும் இருக்கும்.

பூரம்: பொன்னான வாய்ப்புகள் கைகூடி வரும்.

உத்திரம்: வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கன்னி

இன்று எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும். எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்திரம்: குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

ஹஸ்தம்: தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும்.

சித்திரை: சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 9

துலாம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வதில்லை உயரும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

சித்திரை: விலகி சென்றவர்கள் மீண்டும் வருவார்கள்.

ஸ்வாதி: குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நிவர்த்தியாகி உங்கள் சொற்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

விசாகம்: வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம்

இன்று நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவ மாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.

விசாகம்: வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

அனுஷம்: பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.

கேட்டை: வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 1, 7

தனுசு

இன்று வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும்.

மூலம்: தடைபட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

பூராடம்: கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும்.

உத்திராடம்: புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்

இன்று புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள்.

உத்திராடம்: வருமானம் வழக்கம் போல் இருக்கும்.

திருவோணம்: கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும்.

அவிட்டம்: ஆடை அணிகலன்கள் சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 3, 7

கும்பம்

இன்று எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

அவிட்டம்: திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.

சதயம்: வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி: எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

மீனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை.. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.

பூரட்டாதி: சக மனிதர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

உத்திரட்டாதி: உழைப்பது அவசியம்.

ரேவதி: மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com