dina palan
dina palan

25-10-2022

செவ்வாய்கிழமை

மேஷம்

இன்று தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். நீங்கள் எடுத்த முயற்சிகள் நல்லபடி முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்துநீங்கும். உத்தியோகத்தில் வளர்ச்சி இருக்கும். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

அசுபதி: சுதந்திரமாகப் பணியாற்றி வெற்றிவாகை சூடுவீர்கள்

பரணி: உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு.

கிருத்திகை 1ம் பாதம்: சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இளம் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1, 9

ரிஷபம்

இன்று எதிர்பார்த்தபடி சரக்குகள் விற்பனையாகும். போட்டி விற்பனையாளர்கள் விலகிச்செல்வார்கள். குழந்தைகளின் உயர்கல்விக்கான கடன் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அரசுப்பணியில் உள்ளவர்கள் எதிலும் நிதானமாகச் செயல்படவேண்டும். வேலைதேடும் இளைஞர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: தங்கள் மேல் நல்ல மதிப்பு ஏற்படும்.

ரோஹிணி: உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 6

மிதுனம்

இன்று நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் நன்மை ஏற்படாது. எதிர்பார்த்த முடியுமென்று நினைத்த ஒரு காரியம் திடீரென நல்ல முடிவுக்கு வரும். அந்த முக்கியமான காரியம் சாதகமாகவே இருக்கும். உடன்பிறந்தவர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மாறும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

திருவாதிரை: அலைச்சல் இருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 5

கடகம்

இன்று தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நினைத்தபடி மாற்றங்களைச் செய்யலாம். வியாபாரிகள் போட்டி விற்பனையாளர்களை சமாளிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். குழந்தைகள் உயர்கல்வியில் விரும்பிய பாடங்களைப் பெறுவார்கள்.

புனர்பூசம் 4ம் பாதம்: எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும்.

பூசம்: இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள்

ஆயில்யம்: கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2, 3

சிம்மம்

இன்று கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி ஆசிரியர்களிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் கிடைக்கும்.

மகம்: உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

பூரம்: அரசியல்வாதிகள் சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

உத்திரம் 1ம் பாதம்: வெளியூர் பயணம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

கன்னி

இன்று சொத்து சார்ந்த வழக்குகள் வெற்றி தரும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களால் போற்றப்படுவார்கள். கடனும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும் லாபத்தையும் பெறுவார்கள். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகள் அனைத்தையும் விற்பனை செய்துவிடுவார்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும்.

ஹஸ்தம்: உங்கள் முயற்சிகளில் வெற்றியும் பொருளாதார வளமும் வந்து சேரும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 5

துலாம்

இன்று வரவேண்டிய பழைய பாக்கிகள் நீங்கள் கேட்காமலேயே வந்துசேரும். அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள். இதுவரை சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மீண்டும் வேலையில் சேர்வார்கள்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றி.

ஸ்வாதி: இருப்பதை வைத்து மகிழ்ந்துடுவீர்கள்

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 6, 9

விருச்சிகம்

இன்று மனைவி வழியில் அனுகூலங்கள் வந்துசேரும். சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக முடியும். அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டபடி புதிய பதவிகளைப் பெறுவார்கள். நல்ல வாய்ப்புகளும் வந்துசேரும். பெற்றோர்கள் வழியில் இருந்த பகை நீங்கும். வழக்குகள் சாதகமாகும்.

விசாகம் 4ம் பாதம்: சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அனுஷம்: சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

கேட்டை: உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பழுப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட நிறம்: 3, 9

தனுசு

இன்று உங்கள் முயற்சிக்கேற்ற வரவைப் பெறுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். ஒருசிலருக்கு பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகளில் வெற்றியும் கிட்டும். உங்களைப் பிரிந்துசென்ற சொந்தம் திடீரென தேடிவந்து சேரும். பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்

மூலம்: பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும்.

பூராடம்: பணவரத்து திருப்தி தரும்.

உத்திராடம் 1ம் பாதம்: வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மறைந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். அரசு ஊழியர்கள் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். தொழிலதிபர்கள் நினைத்தபடி புதிய ஒப்பந்தம் போடுவார்கள். அது எதிர்பார்த்தபடி லாபமும் தரும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: மனதில் வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும்

திருஓணம்: மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 5, 9

கும்பம்

இன்று வியாபாரிகள் புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல்கள் வந்துசேரும். புதிய முயற்சிகளை தாமதித்து செய்யவேண்டும். எதிலும் நிதானமாகச் செயல்பட்டால் காரியத்தில் வெற்றிகாணலாம். அவசரம் காட்டினால் நஷ்டத்தைக் கொண்டு வரும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: ஆன்மிக எண்ணம் ஏற்படும்.

சதயம் 4ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

மீனம்

இன்று உறவினர்கள், மற்றவர்கள் அனைவரும் ஆதரவாக இருப்பார்கள். உடல்நிலையில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும். கட்டுப்பாடான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் மருத்துவச் செலவைக் குறைக்கலாம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் வந்துநீங்கும். தொழிலதிபர்கள் சந்தையில் அதிக போட்டியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம்

உத்திரட்டாதி: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

ரேவதி: வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com