28-10-2022

வெள்ளிக்கிழமை
தினப்பலன்
தினப்பலன்

மேஷம்

இன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

அசுபதி: இன்று உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும்.

பரணி: தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம்.

கிருத்திகை 1ம் பாதம்: எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க தாமதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

ரிஷபம்

இன்று சீரான பலனை காண்பீர்கள். பதவிகள் வந்து சேரும். விடாமுயற்சியுடன் உழைப்பது நல்லது. அதிகமாக தூரம் செல்ல வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள்.

ரோஹிணி: பயணங்களில் கவனம் தேவை

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: யாரையும் நம்பாமல் இருப்பீர்கள்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்

இன்று அதிகமாக சிரத்தை எடுத்து மேலிடத்திற்கு விஷயங்களை சொல்ல வேண்டியதிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும்.

திருவாதிரை: எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கடகம்

இன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்: தொழில் வியாபாரம் சிறக்கும்.

பூசம்: எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.

ஆயில்யம்: நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சிம்மம்

இன்று பங்குதாரர்களிடம் யதார்த்த நிலையை கடைபிடிக்கவும். எந்தவொரு விஷயத்திலும் ஆராய்ந்து முடிவெடுக்கவும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மிக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.

மகம்: வீண்செலவுகள் இருக்கும்.

பூரம்: பணவரத்து திருப்தி தரும்.

உத்திரம் 1ம் பாதம்: உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

கன்னி

இன்று இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். வெளியூர் சென்று தங்கியிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உங்களது செயல் பாரட்டப்படும்

ஹஸ்தம்: தொழில் வியாபாரம் சிறக்கும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: பணவரத்து திருப்தி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்

இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள்.

ஸ்வாதி: உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்

இன்று தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆவணங்கள் அனைத்தையும் ஒரு முறைக்கு இருமுறை வாசித்து வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

விசாகம் 4ம் பாதம்: சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

அனுஷம்: உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள்.

கேட்டை: பொருளாதார உயர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

தனுசு

இன்று தொழிலில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.

மூலம்: மனதில் உற்சாகம் உண்டாகும்.

பூராடம்: காரியத்தில் ஏற்பட்ட தடை தாமதம் நீங்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: வழக்குகள் தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ப்ரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மகரம்

இன்று உயர் பதவிகள் கிடைக்க கூடும். இருப்பினும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும்.

அதீத உழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். எதிலும் கருத்து சொல்லும் முன் யோசித்து சொல்வது சிறப்பு. குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள்.

திருஓணம்: மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

கும்பம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க வழிவகை நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும்.

சதயம் 4ம் பாதம்: கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாக பேசுவதும் நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

மீனம்

இன்று பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை என இருக்கும். குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.

உத்திரட்டாதி: பார்ட்னர்கள் மூலம் தடங்கல் உண்டாகலாம் கவனம் தேவை.

ரேவதி:எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com