தினப்பலன்
தினப்பலன்

31-10-2022

திங்கட்கிழமை

மேஷம்

இன்று நெருக்கடியான நிலையில் இருந்தாலும் குடும்பத்தில் மிக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குறிப்பாக நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம்.

அசுபதி: இன்று கடன் பிரச்சனை குறையும்

பரணி: வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.

கிருத்திகை 1ம் பாதம்: மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்

இன்று மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும்.. காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: நண்பர்களிடம் பகை ஏற்படலாம்.

ரோஹிணி: பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: இன்று வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்

இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் சிற்சில பிரச்சனைகள் வரத்தான்

செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அதே போல் உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும்.

திருவாதிரை: பயணம் மூலம் சாதகம் கிடைக்கும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்

இன்று தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம்.

புனர்பூசம் 4ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும்.

நிதானம் தேவை.

பூசம்: பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது.

ஆயில்யம்: வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

சிம்மம்

இன்று திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

மகம்: நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும்.

பூரம்: எதிலும் நிதானம் தேவை.

உத்திரம் 1ம் பாதம்: அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி

இன்று பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பணவரத்து தடைபடும்.

ஹஸ்தம்: உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.

சித்திரை 1, 2 பாதங்கள்: கெட்ட கனவுகள் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்

இன்று எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது.

ஸ்வாதி: ஆடம்பர செலவுகள் ஏற்படும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பயணசுகம் கிடைக்கும்

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

விருச்சிகம்

இன்று உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது. தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம். சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும்.

விசாகம் 4ம் பாதம்: தேவையான பண உதவி கிடைக்கும்.

அனுஷம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம்.

கேட்டை: சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

தனுசு

இன்று பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மூலம்: குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது.

பூராடம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உத்திராடம் 1ம் பாதம்: செலவுகள் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மகரம்

இன்று எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும்.

திருஓணம்: தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

கும்பம்

இன்று குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை

அவிட்டம் 3, 4 பாதங்கள்: காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.

சதயம் 4ம் பாதம்: நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: எதிர்ப்புகள் மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

மீனம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: பணவரத்து அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும்.

ரேவதி: காய்ச்சல் சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com