dina palan
dina palan

01-11-2022

செவ்வாய்க்கிழமை

மேஷம்

இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவி கிடைக்கும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும். காரியங்களில்  தடைதாமதம் ஏற்படலாம். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

 அசுபதி: இன்று வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர்.

பரணி: வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர்.

கிருத்திகை 1ம் பாதம்: வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

ரிஷபம்

இன்று எந்த  ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

 கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும்.
ரோஹிணி: இன்று மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: புதிய வீடு மனை வங்க தடைகள் ஏற்படலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மிதுனம்

இன்று தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள்.  சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும்.

 மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும்.
திருவாதிரை: அலைச்சல்கள் வரலாம்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்

இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

 புனர்பூசம் 4ம் பாதம்: கோரிக்கைகள் நிறைவேறும்.

பூசம்: உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

ஆயில்யம்: தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும்.

 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

சிம்மம்

இன்று எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.

 மகம்: வெளியூர் பயணம் ஏற்படும்.

பூரம்: இருந்து வந்த தடைகள் அகலும்.

உத்திரம் 1ம் பாதம்: சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுகூலம் உண்டாகும். எந்த காரியத்தை செய்தாலும் சிறு தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்சனைகள் தலைதூக்கும்.

 உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: மிகவும் உதவிகரமாக இருப்பர்.

ஹஸ்தம்: குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும்.

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

துலாம்

இன்று நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம்  செய்பவர்கள்  கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும்.

 சித்திரை 3, 4ம் பாதங்கள்: மாத பிற்பாதியில் புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும்.
ஸ்வாதி: வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பணப்புழக்கம் அதிகரிக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம்.  கணவன், மனைவிக்கிடையே  ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.  வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

 விசாகம் 4ம் பாதம்: ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம்.
அனுஷம்: உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர்.
கேட்டை: வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

தனுசு

இன்று உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது.  பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்கள்  கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.  பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

 மூலம்: வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
பூராடம்: அலைச்சல் இருக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு.

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மகரம்

இன்று பிரச்சனைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

 உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்.
திருஓணம்: உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: தள்ளிப் போடுதலும் கூடாது.

 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கும்பம்

இன்று மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும்.

 அவிட்டம் 3, 4 பாதங்கள்: எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும்.

சதயம் 4ம் பாதம்: புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்டஎண்: 1, 6

மீனம்

இன்று முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

 பூரட்டாதி 4ம் பாதம்: நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

உத்திரட்டாதி: பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ரேவதி: எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com