dina palan
dina palan

03-11-2022

வியாழக்கிழமை

மேஷம்

இன்று அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படுவீர்கள். வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். செலவு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.

 அசுபதி: இன்று வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரணி: குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.

கிருத்திகை 1ம் பாதம்: தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம்

இன்று அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. புதிய நட்பு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம்.
ரோஹிணி: நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

மிதுனம்

இன்று வியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.  குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும். 

 மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம்.
திருவாதிரை: புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கடகம்

இன்று கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 புனர்பூசம் 4ம் பாதம்: புதிய ஆபரணங்கள் வாங்கலாம்.
பூசம்: வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
ஆயில்யம்: நகைக்கடை துணிக்கடை வியாபாரிகள் நிறைய சம்பாதிப்பார்கள்.

 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்

இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. மாணவர்கள்  கல்வியில் வெற்றி பெற தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

 மகம்: ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கும் பொன்னான காலமிது.
பூரம்: கலைத்துறையினருக்கு நன்மைகள் கூடும் காலமிது.
உத்திரம் 1ம் பாதம்: சினிமா நாடகம் நாட்டியம் துறைகளை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி

இன்று எண்ணியத்தை எப்பாடுபட்டாவது செயல்படுத்த வேண்டும் என்று செயல்படுவீர்கள். கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. வீண்பகை உண்டாகலாம். எனவே  கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மைதரும்.

 உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.
ஹஸ்தம்: தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம்.
சித்திரை 1, 2 பாதங்கள்: வீடு நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்

இன்று தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். தொழில் தொடர்பான   அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

 சித்திரை 3, 4ம் பாதங்கள்: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம்.
ஸ்வாதி: கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்

இன்று தொழிலில் சக பணியாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.  குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகலாம் கவனம் தேவை.  பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

 விசாகம் 4ம் பாதம்: மிகவும் உதவிகரமாக இருப்பர்.
அனுஷம்: பெண்களால் அனுகூலம் கிடைக்கும்.
கேட்டை: வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

தனுசு

இன்று நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். எதிலும் மெத்தன போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.  கோபத்தை குறைப்பது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

 மூலம்: உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர்.

பூராடம்: உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர்.

உத்திராடம் 1ம் பாதம்: அலைச்சல் இருக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மகரம்

இன்று பதட்ட குணத்தை கைவிடுவது முன்னேற்றத்துக்கு உதவும் காரிய தாமதம் உண்டாகும். ஏதாவது ஒருவகையில் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாதாரணமாக பேசப்போக அது சண்டையாக மாறலாம் கவனம் தேவை.  

 உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

திருஓணம்: முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கும்பம்

இன்று வேளை தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். பொருட்களை  கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்புவது நல்லது.

 அவிட்டம் 3, 4 பாதங்கள்: தள்ளிப் போடுதலும் கூடாது.
சதயம் 4ம் பாதம்: தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர்.
 பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும்.  குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும்.

 பூரட்டாதி 4ம் பாதம்: சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.
உத்திரட்டாதி: அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
ரேவதி: நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com