தினப்பலன்
தினப்பலன்

05-11-2022

சனிக்கிழமை

மேஷம்

இன்று பணவரவு திருப்தி தரும். ஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.  எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும்.

 அசுபதி:இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு.

 நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

பரணி:பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கிருத்திகை 1ம் பாதம்:எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம்

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும். தொழில் போட்டிகள் உண்டாகலாம். அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

 கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்:மதிப்பு மரியாதை சிறப்படையும்.செல்வாக்கு ஓங்கும்.

ரோஹிணி:குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.தமப்திகளிடையே அன்பு மேலோங்கும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:வாழ்க்கைத்துணை வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும்

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர் நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் போவது நல்லது.

 மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

திருவாதிரை:பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.

 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்

இன்று பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும். மாணவர்கள் எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும்.

 புனர்பூசம் 4ம் பாதம்:வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

பூசம்:உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம்.

ஆயில்யம்:பதவி உயர்வு சம்பள் உயர்வு போன்றவை இருக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்

இன்று எந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

 மகம்:கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்

பூரம்: தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

உத்திரம் 1ம் பாதம்:இன்று வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர்

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி

இன்று வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.

 உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது.

ஹஸ்தம்: வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது.

சித்திரை 1, 2 பாதங்கள்:கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்

இன்று குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் சாதகமான பலன் கிடைக்கும்.

 சித்திரை 3, 4ம் பாதங்கள்:இன்று பொருளாதார வளம் சீராக இருக்கும்.

அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம்

ஸ்வாதி:சிக்கனம் தேவை.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம்.ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்

இன்று மன குழப்பம் நீங்கி தெளிவான  சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும். மாணவர்கள் புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.

 விசாகம் 4ம் பாதம்:உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம்.

அனுஷம்:பிள்ளைகளால் பெருமை காணலாம்.

கேட்டை:அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

தனுசு

இன்று மற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். எந்த இடத்தில் பேசும் போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.

 மூலம்:திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும்.

பூராடம்:சந்தாண பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது.

உத்திராடம் 1ம் பாதம்:புதிய வீடு மனை வங்க தடைகள் ஏற்படலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மகரம்

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும். தொழில் தொடர்பான அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

 உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைபளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள்

திருஓணம்:அலைச்சல்கள் வரலாம்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்:சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்

இன்று குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் விட்டு கொடுத்து செல்வது மன அமைதியை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நன்மை தரும்.

 அவிட்டம் 3, 4 பாதங்கள்:கோரிக்கைகள் நிறைவேறும்.

சதயம் 4ம் பாதம்:சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள்.

 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மீனம்

இன்று எந்த நிலையிலம்  மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். மாணவர்கள் யாருக்கும் உத்திரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

 பூரட்டாதி 4ம் பாதம்:வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும்.

உத்திரட்டாதி:புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது.

ரேவதி:எடுத்த காரியம் கைகூடும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com