
இன்று எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். உடல் ஆரோக்யம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியமும், மன வலிமையும் உண்டாகும். இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும். பணவரவு இருக்கும். எதிர்ப்புகள் விலகும். எந்த காரியம் செய்தாலும் அதிலுள்ள தடைகளை சமாளிப்பீர்கள். புதிய நபர்களின் நட்பு உண்டாகும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள்.
திருவாதிரை:இன்று தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. மனதில் ஏதாவது கவலை இருந்து வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9