மிதுனம் - 23-12-2022
இன்று அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:இன்று உங்கள் வளர்ச்சியினால் உங்கள் தந்தை சந்தோஷம் அடைவார். மன நல ஆலோசகர்களாக இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குறிப்பாக மருத்துவ தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் ரசிகர்களால் போற்றப்படுவார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுதல்களும் கிடைக்கும்.
திருவாதிரை:இன்று தங்கள் நிலையை கருத்தில் கொள்வதோடு வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். வழக்குகள் வெற்றியை தரும். புதிய வீடு கட்டும் முயற்சி நிறைவேறும். வாகனம் வாங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதால் வியாபாரிகளின் லாபம் பெருகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:இன்று புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள்.கடன் கொடுக்காமல் முடிந்தவரை தவிர்க்கவும். பழைய கடன்களை சீரிய முயற்சியின் பேரில் படிப்படியாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6