
இன்று மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது. காரிய வெற்றி உண்டாகும். குடும்ப கவலை தீரும். கடின உழைப்பும், மனோ தைரியமும் அதிகரிக்கும். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:இன்று வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. தருமசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை:இன்று தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:இன்று உங்களின் பணதேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். ஆனாலும் ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7