
இன்று சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெயரும், புகழும் கிடைக்கும். உங்களது திறமையான செயல்களுக்கு பாராட்டுகளும் கிடைக்கலாம். உங்களது சேமிப்பு குறையலாம். விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பணியாட்களால் பொருள் நஷ்டம் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
சித்திரை 3, 4ம் பாதங்கள்:இன்று குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தை களின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.
ஸ்வாதி:இன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும் அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பண வரத்து இருக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:இன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும். சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5