
இன்று சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படலாம். நண்பர்களால் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இன்று தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.
உத்திரட்டாதி: இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். பார்ட்னர்களிடம் கவனமாக பேசி வியாபாரத்தை கொண்டு செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.
ரேவதி: இன்று பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் தாமதமானாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிபடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9