விருச்சிகம் - 23-12-2022
இன்று அரசியல்துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும்.
விசாகம் 4ம் பாதம்:இன்று தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.
அனுஷம்:இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது.
கேட்டை:இன்று சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். குழந்தைகள் மேல்கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். உத்யோகம் தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9