
இன்று நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து பாராட்டுக்கள் கிடைக்க பெறுவீர்கள். உயர் பதவிகள் கிடைக்க கூடும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெண்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும்.
விசாகம் 4ம் பாதம்:இன்று சந்தோஷம் துக்கம் இரண்டையும் மாறி மாறி அனுபவிக்கப் போகிறீர்கள். தெய்வீக விஷயங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். ஆனால் அதில் முழு நம்பிக்கையுடன் பங்கு பெறுங்கள். வாய்ப்புண் எதுவும் வருவதற்கு காக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
அனுஷம்:இன்று கோபத்தைக் கட்டுப்படுத்தி காரியங்களில் கவனத்தை செலுத்தவும். தொழிலை விமர்சிப்பவர்களை அமைதியாக அலட்சியப்படுத்துங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
கேட்டை:இன்று உங்கள் கவலைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் நாள். யார் யாரைப் பற்றி சொன்னாலும் ஆதாரமில்லாமல் எந்த விஷயத்தையும் நம்பக்கூடாது. வீட்டிலுள்ளவர்களிடம் யோசனை கேட்டு எதையும் செய்வது உத்தமம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6