ரிஷபம் - 23-12-2022

ரிஷபம் - 23-12-2022

இன்று மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்:இன்று பிள்ளைகளிடம் மிக எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லைகள் கடன்சுமைகள் அடங்கும். தாய் மாமனால் அனுகூலம் கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் இனிதே நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

ரோஹிணி:இன்று பொருளும் புகழும் கூடும். அரசியலில் தொல்லைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் படைப்பர். பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். அண்டை அயலாருடன் இருந்து வந்த பிணக்கு மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com