
இன்று குடும்பத்தில் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் நண்பர்களின் ஆதரவுடன் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். மனதை தளரவிடாமல் இருப்பது வெற்றியை தரும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:இன்று உங்கள் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.
ஹஸ்தம்:இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.
சித்திரை 1, 2 பாதங்கள்:இன்று கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9