கன்னி - 27-12-2022

கன்னி - 27-12-2022

இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்களால் தொந்தரவுகள் ஏற்படலாம். ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:இன்று குடும்பத்தில் நல்ல செய்திகள் தேடி வரும். குறிப்பாக குடும்ப விஷயம் சம்பந்தமாக தூரத்திலிருந்து செய்திகள் வரும். வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் தாய்நாடு வரலாம். தேவையற்ற வீண் விவாதங்களில் மூக்கை நுழைத்து வம்பை வாங்க வேண்டாம்.

ஹஸ்தம்:இன்று குடும்பத்தில் சமீப காலமாக இழுத்து கொண்டிருந்த ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்து சேரும். வாகனத்தை ஓட்டும்போதோ பயணிக்கும்போதோ கவனம் தேவை. எந்த விஷயங்களிலும் மந்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். உங்கள் மேல் அக்கறை காட்டுபவர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள்.

சித்திரை 1, 2 பாதங்கள்:இன்று எதிர்பாராத வகையில் திடீரென்று செலவுகள் வரலாம். மனதைப் பக்குவப்படுத்தி செல்வுகளை திட்டமிட்டால் சிறிது சேமிக்கலாம்.  புதிய தொழில் வாய்ப்புக்கு இன்றைய நாளில் ஆலோசனைகள் மேற்கொள்வீர்கள். வீட்டிலுள்ள பெரியவர்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com