இந்தியாவில் மின்னணு பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாட்டுக்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான் எதிர்ப்பு!

india electronic goods import
india electronic goods import

மின்னணு பொருட்கள் இறக்குமதி தொடர்பாக இந்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாட்டிற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்க, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முறையீட்டுள்ளது.

இந்திய அரசு உள்நாட்டு மின்னணு பொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு பொருள்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கணினி, மடிக்கணினி, லேப்டாப், தகவல் தொடர்பு இயந்திரங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் இறக்குமதிக்கு ஆகஸ்ட் மாதம் கட்டுப்பாடு விதித்தது.

மேலும் இந்த கட்டுப்பாடு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 7 பில்லியன் முதல் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் மின்னணு பொருட்கள் இறக்குமதி வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த புதிய கட்டுப்பாட்டால் வர்த்தகம் பாதிப்பை சந்திக்க தொடங்கி இருக்கிறது.

இதனால் இந்தியாவிற்கு மின்னணு பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக ஜெனிவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு சந்தை குழுக் கூட்டத்தில் அமெரிக்கா பிரதிநிதிகள் இந்திய அரசு கொண்டு வந்திருக்க கூடிய மின்னணு இயந்திரங்கள் கட்டுப்பாடு தொடர்பான உத்தரவை குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் உலக வர்த்தகம் அமைப்பு சந்தை குழுக் கூட்டத்தில் இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது மட்டுமில்லாமல் சீனா, கொரியா, ஜப்பான் நாடுகளும் இந்தியாவின் புதிய கட்டுப்பாட்டிற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.

இது குறித்து இந்தியா தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது, இந்திய அரசு மக்களினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. அதே சமயம் இந்த கட்டுப்பாடு மூலம் இறக்குமதி உரிமத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படும் அபாயம் இல்லை. இது முழுக்க முழுக்க கண்காணிப்பை உறுதிப்படுத்துவதை உள்ளடக்கிய கட்டுப்பாடு மட்டுமே என்று தெரிவித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com