இணைய வசதி இல்லாமல் இனி யுபிஐ பேமென்ட் அனுப்பலாம்: ரிசர்வ் வங்கி திட்டம்!

யுபிஐ பண பரிவர்த்தனை
யுபிஐ பண பரிவர்த்தனை

ணைய இணைப்பு இல்லாமல் ஆஃப்லைன் மூலம் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் திட்டத்தை விரைவில் தொடங்க இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது யுபிஐ பரிவர்த்தனை மிக பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுடைய வசதிக்கேற்ப கூடுதல் சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டு வருகின்றன. இனி யுபிஐ பேமென்ட் மூலம் ஆஃப்லைனில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். இந்த திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கியினுடைய ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்காக யுபிஐ லைட் பயன்படுத்தப்படுவதாகவும், இந்த செயலி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சிக்கல் இன்றி குறுகிய அளவிலான பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.யுபிஐ லைட் செயலி மூலம் 200 ரூபாய்க்கு குறைவான பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்றும், தினமும் 2000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளை தங்கு தடை இன்றி செய்ய முடியும். மேலும் இந்த திட்டத்தை போன் பே மற்றும் பேடி எம் செயலிகள் மூலம் பயனாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

யுபிஐ லைட் செயலி மூலம் மாதத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரையிலான பரிவர்த்தனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிவர்த்தனையை மேலும் கூடுதலாக்க ரிசர்வ் வங்கி முயற்சி எடுத்து வருகிறது. இதனால் விரைவில் ஆஃப்லைன் மூலமாக மாதம் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வகையில் இதை பிரபலப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com